சோலார்: இந்தியாவில் சீன நிறுவனம் முதலீடு!

By Balaji

|

Published on 6 Feb 2018, 12:00 AM

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் சீன சோலார் தகடுகள் இறக்குமதியில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளால் சீன நிறுவனங்கள் சோலார் தகடுகளை உற்பத்தி செய்வதற்கான முதலீடுகளை இந்தியாவில் அதிகளவில் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளன.

ஜனவரி 24ஆம் தேதி அமெரிக்க ட்ரம்ப் அரசு வெளியிட்டிருந்த அறிவிப்பு ஒன்றில், இறக்குமதி செய்யப்படும் சோலார் தகடுகளுக்கு 30 சதவிகிதம் கூடுதலாக இறக்குமதி வரி விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் சர்வதேச அளவில் சோலார் தகடுகள் உற்பத்தியில் முன்னிலையில் இருக்கும் சீனாவுக்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. சோலார் மின்னுற்பத்தி வாயிலாக உலகளவில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்கள் வாயிலாகக் குறைந்த செலவில் மின்னுற்பத்தி மேற்கொள்ளும் நடவடிக்கை மேலோங்கியுள்ள அதேநேரம், சீனாவிலிருந்து இறக்குமதி செய்வதால் உள்நாட்டு உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுவதாக அமெரிக்கா, இந்தியா மற்றும் ஐரோப்பிய நாடுகள் புகார் கூறி சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.

ADVERTISEMENT

இந்தியாவில் சீன சோலார் தகடுகளை இறக்குமதி செய்வதற்கு 70 சதவிகித வரி விதிப்பது தொடர்பான ஆலோசனையும் உள்ளது. இந்நிலையில் சீனாவின் முன்னணி சோலார் தகடுகள் உற்பத்தி நிறுவனமான ஜோங்கி சோலார் டெக்னாலஜி லிமிடெட், சுமார் 309 மில்லியன் டாலர் முதலீடு செய்து இந்தியாவில் உற்பத்தி ஆலைகளை மேம்படுத்தத் திட்டமிட்டிருப்பதாக அறிவித்துள்ளது. இந்நிறுவனத்தின் விற்பனை அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளில் 10 சதவிகிதமாக மட்டுமே இருப்பதாகவும், அந்த அளவை உயர்த்துவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் அந்நிறுவனத்தின் மூலோபாய இயக்குநரான மேக்ஸ் க்ஷியா தெரிவித்துள்ளார்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Balaji

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel