எ.வ.வேலு வழக்கில் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு நோட்டீஸ்!

Published On:

| By Kavi

எஃப்.ஐ.ஆரை  ரத்து செய்யக்கோரி முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தாக்கல் செய்த மனு மீது லஞ்ச ஒழிப்புத் துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2025 டிசம்பர் 14ஆம் தேதி நடந்த திமுகவின் இளைஞரணி மாநாட்டுக்காக, திருவண்ணாமலை மாவட்டம் மலப்பம்பாடி ஏரியில் அனுமதிபெற்ற அளவைத் தாண்டி, பொக்லைன் (Hitachi) இயந்திரங்கள் மூலம் 20 முதல் 30 அடி ஆழத்திற்கு இரவு பகலாக கனிம வளங்கள் அள்ளப்பட்டன என்றும் இதனால் அரசுக்கு 8 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும் அறப்போர் இயக்கம் புகார் தெரிவித்தது.

ADVERTISEMENT

இந்த புகாரின் பேரில் திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மீது லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக நமது மின்னம்பலத்தில், ‘திருவண்ணாமலையில் ரூ.8 கோடி மணல் முறைகேடு.. எ.வ.வேலு மீது குற்றச்சாட்டு- உண்மை நிலவரம் என்ன? களத்தில் இருந்து ரிப்போர்ட்!’ என்ற தலைப்பில் விரிவாக செய்தி வெளியிட்டிருந்தோம்.

ADVERTISEMENT

இந்தசூழலில் தங்களுக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்டுள்ள எஃப்.ஐ.ஆரை (FIR) ரத்து செய்யக்கோரி எ.வ.வேலு, அவரது மகன் எ.வ.குமரன் இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனு இன்று (அக்டோபர் 7) நீதிபதி லட்சுமி நாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தது.

ADVERTISEMENT

அப்போது திமுக முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு மற்றும் அவரது மகன் எ.வ. குமரன் ஆகியோருக்கு இடைக்கால நிவாரணம் வழங்க நீதிபதி மறுத்துவிட்டார்.

இருவருக்கும் எதிராகப் பதிவு செய்யப்பட்டுள்ள எஃப்.ஐ.ஆரை  ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்த மனு தொடர்பாக, லஞ்ச ஒழிப்புத் துறைக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை நவம்பர் 6-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share