திமுகவுடனான கூட்டணி முறிந்துவிட்டது.. சிபிஎம் கே. பாலகிருஷ்ணன்

Published On:

| By Minnambalam Desk

CPM Balakrishnan on DMK Alliance

திமுக (DMK) தலைமையிலான கூட்டணியில் சிபிஎம் கட்சி இப்போது இல்லை என சிபிஎம்-ன் (CPM) மூத்த தலைவர் கே. பாலகிருஷ்ணன் (Balakrishnan) தெரிவித்துள்ளார்.

நமது மின்னம்பலம் யூடியூப் சேனலுக்கு கே.பாலகிருஷ்ணன் அளித்த நேர்காணல்: திமுகவில் முதல்வராக இருந்த ஸ்டாலின், பல அமைச்சர்கள் தோல்வி அடைஞ்சிருக்காங்க.. அதனால தோல்விக்கு காரணம் என்னான்னு அனலைஸ் பண்ணி, அதை சரி படுத்துறதுக்காக அவங்க ஆழமான கவனம் செலுத்தணுமே தவிர ஆட்சிக்கு வந்து 15 நாள்லயே இந்த ஆட்சி வந்து இன்னமும் அஞ்சு ஆண்டுகள் நீடிக்காது, நாளைக்கே இந்த ஆட்சி கவிழ்ந்துவிடும் அப்படின்னு ஒரு எதிர்நிலையான விமர்சனங்களை வைக்கிறதுல என்ன நியாயம் இருக்க முடியும்? ஆகவே அவங்க ஒரு பதற்றமான சூழ்நிலையில இருக்காங்கங்கற மாதிரிதான் படுது.

ADVERTISEMENT

தேர்தலுக்கு முன்னாடி திமுக ஆதரவோடு நாங்க வெற்றி பெற்றோம் என்பது உண்மைதான். ஆனால், ஒரு சூழ்நிலை கட்டாயப்படுத்துற போது, அந்த சூழ்நிலைக்கு நம்ம வந்து பதில் சொல்ல வேண்டிய தேவை இருக்கு.

தேர்தலுக்கு பிந்தைய சூழ்நிலையில உதாரணமா, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில கட்சிகள் இருக்கிற பல கட்சிகள் இந்த பக்கம் இருக்கிறாங்க. திமுக தனித்து நிக்குது. இப்ப தேர்தலுக்கு பிந்தியிருக்கிற சூழ்நிலையில எங்களை பொறுத்தவரையில நாம் எப்படிப்பட்ட அரசியல் உத்தியை மேற்கொள்ளலாம் என்பதை இனிமேதான் நாங்க விவாதிக்க போறோம்.

ADVERTISEMENT

தமிழ்நாட்டில் சிபிஎம் கட்சி தன்னுடைய சொந்த பலத்தை அதிகரிப்பதற்கான வழி என்பது.. இடதுசாரி கட்சிகளுடைய மாற்றுக் கொள்கையை தமிழ்நாட்டில் கொண்டு போவது எப்படி? மதச்சார்பற்ற நிலையை வலியுறுத்துறதுல, மக்கள் பிரச்சனையில மற்ற ஒத்த கருத்துடைய கட்சிகளோடு இணைந்து பணியாற்றுவது எப்படி? அப்படிங்கிற மூன்றையும் நாங்க விவாதிக்க போறோம். ஒரு நிரந்தரமான அணி என்கிற அப்படிப்பட்ட நிலைக்கு நம்ம இப்போ போக முடியாது.

ஏற்கனவே இருந்த கூட்டணி என்பது இப்போது இல்லை. திமுகவே அந்த கூட்டணியே தொடருகிறது என சொல்கிறதா? இல்லையே..இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் கூறினார்.

ADVERTISEMENT

நேர்காணல்:

CPIM Balakrishnan Inteview | திமுகவுடன் கூட்டணி முறிந்துவிட்டது... | CM Vijay | MKStalin | TVK | DMK
Photo of author
Minnambalam Desk
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share