வைஃபை ஆன் செய்ததும், “நான் ”தன்னந்தனி ஆளு”-ன்னு பாடியபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.
என்னங்க ப்ரோ.. சிஎம் விஜய் பாட்டை பாடுறீங்க.. திருச்சி மேட்டரா?
பாட்டுன்னா எல்லாருக்கும் பொருந்தும் ப்ரோ.. அண்ணாமலையை பத்திதான் சொல்றேன் ப்ரோ..
ஓஹோ.. அண்ணாமலை (ANNAMALAI) தனிக்கட்சி தொடங்குறாரோ?
பொறுங்க ப்ரோ.. அண்ணாமலை இன்னைக்கு திடீர்னு டெல்லி புறப்பட்டு போயிருக்காரு.. ஏர்போர்ட்ல பாஜக கொடி இல்லாத காரில் வந்து இறங்குன அண்ணாமலைகிட்ட தனிக்கட்சி தொடங்குறீங்களா?ன்னு ரிப்போர்ட்டர்ஸ் கேட்டதுக்கு, “எல்லாத்தையும் 2 நாளில் உங்ககிட்ட பேசுறேன்”ன்னு மட்டும் சொல்லிட்டு போயிட்டார்..
இன்னொரு பக்கம் அண்ணாமலையோட கட்சி பேருன்னு சில பெயர்களை சொல்றாங்க… கோவையில தலைவா! தரணி ஆள வா! ன்னு போஸ்டர் ஒட்டியிருக்காங்க..
இதை பத்தி அண்ணாமலைக்கு நெருக்கமான நண்பர்கள்கிட்ட பேசுனப்ப,” டெல்லி தலைமை நம்மளை கூப்பிட்டு ஏன் எலக்ஷன்ல தோற்றோம்? 11% ஓட்டு வாங்குன நாம் ஏன் 3 சதவீதம்தான் வாங்க முடிஞ்சது? இதை சரி பண்ண என்ன செய்யலாம்?னு கேட்டாங்க அப்படின்னா நாம வெளிப்படையா சில விஷயங்களை சொல்லி அதன்படி செயல்படனும் சொல்வோம்.. அப்படி டெல்லி கூப்பிட்டு கேட்கலைன்னா அடுத்து நாம என்ன செய்யறதுன்னு முடிவு செய்வோம்னுதான் சொல்லி இருந்தார்..
இப்ப டெல்லியில இருந்து அமித்ஷா அழைச்சிருக்காரு.. அமித்ஷாவை நாளைக்கு ஜூன் 2-ந் தேதி சந்திக்கிறார் அண்ணாமலை.. அப்ப தமிழ்நாட்டுல பாஜக வளரனும்னா இதையெல்லாம் செய்யனும்னு சொல்ல இருக்கிறாரு..
குறிப்பா திமுகவும் வேண்டாம்.. அதிமுகவும் வேண்டாம்.. அதிமுகவோட கூட்டணியை விட்டு விலகி தமிழ்நாட்டு பாஜக தனிச்சு நின்னு ஜெயிக்கிறதுக்கான வேலைகளை இப்ப இருந்தே செய்யனும்னு டெல்லியில சொல்ல இருக்கிறார் அண்ணாமலை..
அவரு சொல்றதை டெல்லி மேலிடம் கேட்டுகிட்டா பாஜகவில தொடர்ந்து பயணிப்பாரு.. பாஜக தலைவரா மறுபடியும் தன்னை நியமிச்சா சரி செஞ்சுடலாம்னு அண்ணாமலை நினைக்கிறார்.. இதைத்தான் டெல்லியில சொல்ல இருக்கிறார்.. அப்படி டெல்லி ஏத்துக்கலைன்னா அடுத்த முடிவை எடுப்பார்”ன்னு சொல்றாங்க..
ஏங்க ப்ரோ.. அண்ணாமலை உடனே தனிக்கட்சி தொடங்கிடுவாரா?
அதைப் பத்தியும் விசாரிச்சப்ப, “அப்படி எல்லாம் அண்ணாமலை உடனே தனிக்கட்சி தொடங்கிட மாட்டாரு.. இப்போதைக்கு அதுக்கான சூழ்நிலையும் இல்லை.. அதனால யோசிச்சுதான் செய்வார்.. அதுக்குதான் 2 நாள் கழிச்சு பிரஸ்ல பேசுறேன்னு சொல்லி இருக்கிறார். டெல்லி மீட்டிங்கைப் பொறுத்துதான் அண்ணாமலையோட முடிவு இருக்கும்”னு சொல்றாங்க ப்ரோ என்றபடியே டைப் செய்துவிட்டு சென்ட் பட்டனை தட்டிவிட்டு ஆஃப் லைன்னுக்குள் போனது வாட்ஸ் ஆப்.
