விஜய் ஆட்சிக்கு ஆதரவாக ஓட்டுப் போட்ட 21 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் பதவி தப்பியது!

Published On:

| By Pandeeswari Gurusamy

Speaker JCD Prabhakar

சட்டமன்றத்தில் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்த 21அதிமுக எம்எல்ஏக்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை என சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் தெரிவித்துள்ளார்.

2026 சட்டமன்ற தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் முதல்வராக கடந்த மே 10ம் தேதி முதல்வராக பதவியேற்றார். இதைத்தொடர்ந்து
கடந்த மாதம் 13-ந் தேதி தமிழக சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் த.வெ.க. அரசு வெற்றி பெற்றது. ஆதரவாக 144 வாக்குகளும், எதிராக 22 வாக்குகளும் கிடைத்தன. 5 பேர் நடுநிலை வகித்தனர். தி.மு.க. வெளிநடப்பு செய்தது.

ADVERTISEMENT

இதைத்தொடர்ந்து அரசுக்கு ஆதரவாக வாக்களித்த அதிமுகவைச் 25 உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்யக் கோரி எடப்பாடி பழனிசாமி சபாநாயகர் ஜேசிடி பிரபாகருக்கு கடிதம் எழுதி இருந்தார்.

இந்த கடிதம் மீதான நடவடிக்கை குறித்து ஜேசிடி பிரபாகர் தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

ADVERTISEMENT

அப்போது கடந்த 27.05.2026 அன்று பேரவைத் தலைவர் அலுவலகத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடமிருந்து நான்கு கடிதங்கள் வந்துள்ளன.

அக்கடிதங்களில், கொறடா உத்தரவை மீறி வாக்களித்த 21 சட்டமன்ற உறுப்பினர்கள் அளித்த விளக்கத்தையும், அவர்களின் மனமார்ந்த வருத்தத்தையும் ஏற்று, கட்சியின் பொதுச்செயலாளர் என்ற முறையில் அவர்களைத் தான் மன்னித்துவிட்டதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

அவர் வழங்கிய 4 கடிதங்களை முறையாக ஆய்வு செய்தேன். எடப்பாடி பழனிசாமி 13-5-2026 அன்று அனுப்பிய கடிதத்தில் தெரிவித்தபடி, உறுப்பினர்களின் மன்னிப்பு கோரிக்கையை ஏற்றுக்கொள்கிறேன். அனைத்து மேல் நடவடிக்கைகளையும் கைவிடுகிறேன். என்றார்.

மன்னிக்கப்பட்ட 21 அதிமுக உறுப்பினர்கள் விவரம்:

எஸ். எஸ்.சுகுமார் (ஆற்காடு)

என். எஸ். நடராஜ் (காங்கேயம்)

ஹரி பாஸ்கர் (அந்தியூர்)

க.மோகன் (பண்ருட்டி)

ஜெ. திலீபன் ஜெய்சங்கர் (சங்கரன்கோவில் – தனி)

நத்தம் விசுவநாதன் (நத்தம்)

எஸ். பி. வேலுமணி (தொண்டாமுத்தூர்)

கே. பி. அன்பழகன் (பாலக்கோடு)

ஆர். காமராஜ் (நன்னிலம்)

சி. விஜயபாஸ்கர் (விராலிமலை)

எம். ஆர். விஜயபாஸ்கர் (கரூர்)

கே. சி. வீரமணி (ஜோலார்பேட்டை)

ஒ. அதித்திருத்தணி (திருத்தணி)

அருண்மொழிதேவன் (புவனகிரி)

லீமா ரோஸ் மார்டின் (லால்குடி)

கு. ரவி மனோகரன் (பழனி)

எஸ். சேகர் (பரமத்தி வேலூர்)

இரா. ரகேஷ் (சங்கராபுரம்)

மரகதம் வெற்றிவேல் (பாப்பிரெட்டிப்பட்டி)

க. பாலகிருஷ்ணரெட்டி (ஓசூர்)

சி. வி. சண்முகம் (மயிலம்)

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர். அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த செய்திகளைத் தொடர்ந்து எழுதி வரும் இவர், தற்போது 'மின்னம்பலம்' இணைய இதழில் பணியாற்றி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share