அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என ஆளுநர் அர்லேகரிடம் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேரில் சென்று கடிதம் கொடுத்தார்.
தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரி 3-வது முறையாக ஆளுநர் அர்லேகரை இன்று மாலை சந்தித்தார். அப்போது அமமுகவின் 1 எம்.எல்.ஏ.வும் விஜய்க்கு ஆதரவு தருகிறார் என செய்திகள் வெளியாகின.
ஆனால் இதனை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் திட்டவட்டமாக மறுத்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து ஆளுநர் அர்லேகரை இன்று இரவு நேரில் சந்தித்த டிடிவி தினகரன், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க வேண்டும்; அவருக்கு தமது கட்சியின் மன்னார்குடி எம்.எல்.ஏ. காமராஜ் ஆதரவு தருகிறார் என்கிற கடிதத்தையும் கொடுத்தார். அந்த கடிதத்தில் எம்.எல்.ஏ. காமராஜ் கையெழுத்தும் இடம் பெற்றுள்ளது.

இதனால் தமிழக அரசியலில் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
