அதிமுகவில் புதிய மா.செ.க்கள் நியமனம்!

Published On:

| By Kavi

அதிமுகவில் எஸ்.பி வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோருக்கு மீண்டும் பொறுப்பு வழங்கிய அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி புதிய மாவட்டச் செயலாளர்களையும் நியமித்துள்ளார். 

இதுகுறித்து அவர் இன்று (ஜூன் 25) வெளியிட்டுள்ள அறிவிப்பில், 

ADVERTISEMENT

திருப்பூர் மாநகர், திருப்பூர் புறநகர், கோவை புறநகர் தெற்கு, திருச்சி புறநகர் தெற்கு, தஞ்சாவூர் மத்தியம், புதுக்கோட்டை வடக்கு, புதுக்கோட்டை தெற்கு என செயல்பட்டு வந்த மாவட்டக் கழக அமைப்புகள், கழக நிர்வாக வசதியைக் கருத்தில்கொண்டு, இன்று முதல் கழக அமைப்பு ரீதியாக திருத்தி அமைக்கப்படுகிறது” என்று கூறியுள்ளார். 

மாற்றியமைக்கப்பட்ட மாவட்டங்களின் செயலாளர்கள்

ADVERTISEMENT

திருப்பூர் – வேல் குமார் எம் சாமிநாதன்
திருப்பூர் புறநகர் கிழக்கு- செல்வகுமார்
திருப்பூர் புறநகர் மேற்கு – சிவசாமி
கோவை புறநகர் தெற்கு மாவட்டம் – பொள்ளாச்சி ஜெயராமன்
கோவை புறநகர் மத்திய மாவட்டம் – வேலுசாமி

திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம் -மனோகரன்
திருச்சி புறநகர் கிழக்கு மாவட்டம் – சிவகுமார்

ADVERTISEMENT

தஞ்சாவூர் மாநகர்- காந்தி
தஞ்சாவூர் மத்திய மாவட்டம்- ராஜமாணிக்கம்

புதுக்கோட்டை வடக்கு மாவட்டம்- பழனிவேல்
புதுக்கோட்டை தெற்கு மாவட்டம் – ஏ எல் ராமு

புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் – ஞான கலைசெல்வம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வட சென்னை தெற்கு (மேற்கு), பெரம்பலூர், விருதுநகர் கிழக்கு தென்காசி வடக்கு ஆகிய மாவட்டங்களின், மாவட்டக் கழகச் செயலாளர்களாகக் கீழ்க்கண்டவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வடசென்னை தெற்கு (மேற்கு) மாவட்டம் – சந்தானகிருஷ்ணன்

பெரம்பலூர் மாவட்டம் – வெங்கடாசலம்

விருதுநகர் கிழக்கு மாவட்டம் – ஜெயபெருமாள்

தென்காசி வடக்கு மாவட்டம் – சுசிகரண்

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share