நீட் மாணவர்களுக்கு ஷாக் நியூஸ்: ஜூன் 21-ல் மறுதேர்வு! அடுத்த ஆண்டு முதல் OMR கிடையாது – மத்திய அரசின் அதிரடி மாற்றம்!

Published On:

| By Mathi

Neet Re Exam

எம்பிபிஎஸ், பிடிஎஸ் உட்பட இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு நீட் (NEET) நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டது. மே 3-ந் தேதி நாடு முழுவதும் 552 நகரங்களில் இந்த தேர்வு நடத்தப்பட்டது. வெளிநாடுகளில் துபாய் உட்பட 14 நகரங்களில் இத்தேர்வு நடந்தது. நீட் தேர்வை 22.80 லட்சம் மாணவர்கள் எழுதினர்.

நீட் ரத்து- சிபிஐ விசாரணை

இந்நிலையில் நீட் நுழைவுத் தேர்வில் முறைகேடுகள் நடந்ததாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. ராஜஸ்தான் மாநிலத்தில் நீட் நுழைவுத் தேர்வு வினாத்தாள் கசிந்ததும் அம்பலமானது. இந்த முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இதனால் மே 3-ந் தேதி நடத்தப்பட்ட நீட் நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது.

ADVERTISEMENT

நீட் மறு தேர்வு

இதனிடையே நீட் மறுதேர்வு ஜூன் 21-ந் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் முறைக்கு மாறும் நீட் தேர்வு

மேலும் அடுத்த ஆண்டு முதல் OMR Sheet முறையை ரத்து செய்துவிட்டு ஆன்லைனில் கணிணி முறையில் நீட் தேர்வு நடத்தப்படும் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளார்.

ADVERTISEMENT

ஆன்லைன் முறை- பெற்றோர் அதிர்ச்சி

நீட் (NEET) நுழைவு தேர்வு ஏற்கனவே கிராமப்புற மாணவர்களுக்கு சுமையாக உள்ள நிலையில் அதில் கணிணி முறையிலான தேர்வு என்பது மிகப் பெரும் அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளதாக பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share