நீட் மறுதேர்வு முடிவு: 12ஆவது ரேங்கில் தமிழ்நாடு மாணவர்!

Published On:

| By Kavi

நீட் மறு தேர்வில் 11.21 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளதாக தேசிய தேர்வு முகமை நேற்று (ஜூலை 16) தெரிவித்துள்ளது. 

கடந்த மே 3ஆம் தேதி நாடு முழுவதும் இளங்கலை மருத்துவ பட்டப்படிப்புக்கான நீட் தேர்வு நடைபெற்றது. ஆனால் வினாத்தாள் கசிவு காரணமாக இந்த தேர்வு ரத்து செய்யப்பட்டு மீண்டும் ஜூன் 21ஆம் தேதி நீட் மறு தேர்வு நடைபெற்றது. 

ADVERTISEMENT

இந்தியாவில் 551 மையங்கள் மற்றும் வெளிநாடுகளில் 14 இடங்களில் அமைக்கப்பட்ட 5,440 தேர்வு மையங்களில் சுமார் 20 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். 

இதில் மருத்துவம், பல் மருத்துவம், ஆயுஷ் உள்ளிட்ட படிப்புகளுக்காக மொத்தம் 11.21 லட்சம் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. 

ADVERTISEMENT

நீட் தேர்வு முடிவு வெளியாகி இருக்கும் நிலையில், 13 மொழிகளில் நடந்த இந்த தேர்வில் 58 சதவிகித பெண்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.   17 முதல் 19 வயதுடைய தேர்வர்கள் தான் அதிக மதிப்பெண் பெற்றுள்ளனர். 

138 மாணவர்கள் 690/720 மதிப்பெண்களுக்கும் அதிகமாக பெற்றுள்ளனர். 

ADVERTISEMENT

முதல்முறையாக தேர்வை எதிர்கொண்டவர்களில் 93 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

உத்தர பிரதேசம் மாநிலத்திலிருந்து அதிகபட்சமாக 1.7 லட்சமானவர்களும், குறைந்தபட்சமாக லட்சத்தீவில் 43 மாணவர்களும் தேர்ச்சி அடைந்துள்ளனர். 

பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், உத்தர பிரதேசம், தமிழ்நாடு, மகாராஷ்டிரா, பீகார், தெலங்கானா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் முதல் 17 இடங்களுக்குள் வந்துள்ளனர். இவர்கள், 705க்கும் அதிகமான மதிப்பெண்களை பெற்றுள்ளனர்.

இது தவிர 19 மாணவர்கள் 700 மதிப்பெண்களுக்கு அதிகமாகவும், 1,492 மாணவர்கள் 650 மதிப்பெண்களுக்கு அதிகமாகவும், 10,160 மாணவர்கள் 600 மதிப்பெண்களுக்கு அதிகமாகவும்,  90,780 மாணவர்கள் 500 மதிப்பெண்களுக்கு அதிகமாகவும் பெற்றுள்ளனர். 

பொது பிரிவில் இருந்து 2.91 லட்சம், பிற்படுத்தப்பட்டோர் பிரிவிலிருந்து 5.12 லட்சம், எஸ்சி பிரிவிலிருந்து 1.59 லட்சம், எஸ்டி பிரிவிலிருந்து 63,716, பொருளாதாரத்தில் நலிந்த பிரிவிலிருந்து 95,026 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். 

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஆர்யன் குப்தா, ஹரியானா மாநிலத்தை பன்சூல் பன்சால் ஆகிய மாணவர்கள், 720க்கு 715 மதிப்பெண்கள் பெற்று, தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ளனர்.

தென்னிந்தியாவில், தமிழ்நாட்டைச் சேர்ந்த வெங்கடபதி வேலாயுதம் 99.99915 சதவீத புள்ளிகளுடன் (percentile) மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார். அவர் தேசிய அளவில் 12-வது இடத்தையும் பெற்றுள்ளார்.

மேலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த சுடர் என்ற மாணவன் தேசிய அளவில் 45 வது இடத்தையும், சபரி என்ற மாணவன் 59வது இடத்தையும், ஜெய் கிருஷ்ணா என்ற மாணவன் 75 வது இடத்தையும், சாம்விதா என்ற மாணவி 82 வது இடத்தையும், நவீதனா 88 வது இடத்தையும், ஜனனி ஸ்வேதா 112 வது இடத்தையும், ரோகித் மேத்யூ 115ஆவது இடத்தையும், மற்றொரு ஜெய் கிருஷ்ணா என்ற மாணவன் 134ஆவது இடத்தையும் பெற்றுள்ளனர்.

நீட் தேர்வு டாப்பர்ஸ் லிஸ்ட் – முழு பட்டியல்!

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share