ADVERTISEMENT

ஆம்ஸ்ட்ராங் படுகொலை : தேசிய பட்டியலினத்தோர் ஆணையம் நோட்டீஸ்!

Published On:

| By christopher

National SC/ST Commission Notice to tn govt for Armstrong Murder

ஆம்ஸ்ட்ராங் படுகொலை தொடர்பாக தமிழ்நாடு அரசு மற்றும் டிஜிபியிடம் விளக்கம் கேட்டு தேசிய பட்டியலினத்தோர் நல ஆணையம் இன்று (ஜூலை 9) உத்தரவிட்டுள்ளது.

கடந்த 5ஆம் தேதி பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் சென்னை பெரம்பூரில் படுகொலை செய்யப்பட்டார்.

ADVERTISEMENT

இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இந்த வழக்கு தொடர்பாக இதுவரை மறைந்த ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக நாளிதழ்களில் வந்த செய்திகளை அடிப்படையாகக் கொண்டு தாமாக முன்வந்து தேசிய பட்டியலினத்தோர் நல ஆணையம் இந்த வழக்கு விசாரணையை முன்னெடுத்துள்ளது.

ADVERTISEMENT

இதனையடுத்து படுகொலை தொடர்பாக விளக்கம் கேட்டு தமிழக அரசுக்கும், தமிழக டிஜிபி சங்கர் ஜிவாலுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ADVERTISEMENT

கிறிஸ்டோபர் ஜெமா

ஆண்டாள் டூ ஆர்யமாலா: இயக்குநர் – தயாரிப்பாளர் இடையே நீடிக்கும் தகராறு என்ன?

கண்ணீருடன் முறையிட்ட ஆம்ஸ்ட்ராங் மனைவி… முதல்வர் ஆறுதல்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share