Aryamala is my film Vadalur Aadrai

ஆண்டாள் டூ ஆர்யமாலா: இயக்குநர் – தயாரிப்பாளர் இடையே நீடிக்கும் தகராறு என்ன?

சினிமா

சினிமாவில் இயக்குநர் ஆவதும், அந்தப் படத்திற்கு முதலீடு செய்ய தயாரிப்பாளரை சம்மதிக்க வைப்பதும் அவ்வளவு எளிதான செயல் அல்ல. வாய்ப்பு கிடைத்தவர்கள் அதனை சரியாக பயன்படுத்துவதில்லை. தயாரிப்பாளர்களை ஏமாற்றும் போக்கு இங்கு அதிகரித்து வருகிறது என்கிற விமர்சனங்கள் இங்கு நீண்ட காலமாக இருந்து வருகிறது. அதனை உண்மை என நிருபிக்கும் வகையில் ஆர்யமாலா படத்தின் பஞ்சாயத்து உள்ளது.

‘பீச்சாங்கை’ கார்த்திக், மனிஷாஜித் மற்றும் பலர் நடிக்க உருவாகியுள்ள ‘ஆர்யமாலா’ என்ற படத்தின் இசை வெளியீடு நேற்று (ஜூலை 8) மாலை  நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் ‘ஆர்யமாலா’ என்னுடைய படம், தற்போது தயாரிப்பாளர், அவரையே இயக்குனர் என்று தனது பெயரை போட்டு படத்தை வெளியிடும் முயற்சியில் இறங்கியுள்ளதாக வடலூர் ஆதிரை என்பவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து தனது முகநூலில் வடலூர் ஆதிரை குறிப்பிட்டிருப்பதாவது,

“கடந்த 2017ல் ஆண்டாள் என்கிற பெயரில்… திரைப்பட நடிகர் பீச்சாங்கை கார்த்திக், நடிகை மணிஷாஜித் ஆகியோரை நாயகன், நாயகியாக கொண்டும்…. இயக்குனர் மாரிமுத்து, சிவசங்கர் மாஸ்டர், உஷா எலிசபெத், தவசி உள்ளிட்ட நடிகர், நடிகைகளை முக்கிய கதாபாத்திரங்களாகவும்…

ஒளிப்பதிவாளர் ஜெய், இசையமைப்பாளர் செல்வநம்பி, படத்தொகுப்பாளர் சகா ஹரிஹரன், கலை இயக்குனர் சிவா, நடன இயக்குனர் தஸ்த்தா, சண்டை மிரட்டல் செல்வா-வீரா, தயாரிப்பு மேலாளர் ஹென்றிகுமார், மக்கள் தொடர்பு ஷேக் ஆகியோர் அடங்கிய படக்குழுவை வைத்து பெப்சி அமைப்பின் அனுமதியோடு தமிழ் திரைப்படத்தை இயக்கி முடித்தேன்.

அப்படம் தற்சமயம் ’ஆர்யமாலா’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு தயாரிப்பாளரே இயக்குனர் எனும் பதிவோடு 08.07.2024 அன்று இசை மற்றும் டிரைலர் வெளியீடு நடைபெற உள்ளதாக அறிந்து வேதனை அடைந்தேன். ஊடக நண்பர்களும், பேஸ்புக் உறவுகளும், எழுத்தாளர்களும், கவிஞர்களும், சமூக செயற்பாட்டாளர்களும் ஒரு படைப்பாளியாக எனது உரிமையை பாதுகாக்க துணை நிற்குமாறு அன்போடு வேண்டுகிறேன்,” எனப் பதிவிட்டுள்ளார்.

இந்தப் பதிவு வெளியான சில மணி நேரங்களில் நேற்று மாலை நடைபெறுவதாக இருந்த ஆர்யமாலா படத்தின் இசை வெளியீட்டு நிகழ்வு ரத்து செய்யப்படுவதாக படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SPR CINEMAS (@SprCinemas) / X

 

வடலூர் ஆதிரையின் முகநூல் பதிவு பற்றி தயாரிப்பாளரிடம் கேட்ட போது,

”ஜேம்ஸ்யுவன், வடலூர் ஆதிரை ஆகிய இருவரும் ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள். இவர்களில் வடலூர் ஆதிரை ஒரு படம் இயக்கும் முயற்சியில் இருக்கும் நேரத்தில் தானே அப்படத்தைத் தயாரிக்கிறேன் என்று முன் வந்திருக்கிறார் ஜேம்ஸ்யுவன். அதன்பின், வடலூர் ஆதிரை கேட்ட தொகையை முன்பணமாக கொடுத்திருக்கிறார் ஜேம்ஸ்யுவன். அதனை கொண்டுபடப்பிடிப்பு தொடங்கப்பட்டு 50% படம் முடிக்கப்பட்டிருக்கிறது.

இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்கு வடலூர் ஆதிரை பணம் கேட்டிருக்கிறார். அப்போது, ஏற்கெனவே கொடுத்த பணத்துக்கு கணக்குக் கொடுத்தால் பணம் தருவதாக தயாரிப்பாளர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

கணக்கு கொடுக்காமல் கேட்ட பணத்தைக் கொடுத்தால் மீதிப்படம் நடக்கும் என்று சொல்லியிருக்கிறார் வடலூர் ஆதிரை. அதை ஏற்றுக் கொள்ள மறுத்த ஜேம்ஸ்யுவன், யார் யாருக்கு எவ்வளவு பணம் தரவேண்டும் என்று சொல்லுங்கள், நாங்களே கொடுக்கிறோம் என்று சொல்லியிருக்கிறார். அந்த அடிப்படையில் சில நாட்கள் படப்பிடிப்பு நடந்திருக்கிறது.

தன்னிடம் பணத்தை கொடுக்காமல் பயனாளிகளிடம் நேரடியாக பணத்தை கொடுப்பதை ஜீரணிக்க முடியாத இயக்குநர் வடலூர் ஆதிரை விதித்த சில நிபந்தனைகளை ஏற்க முடியாது என ஜேம்ஸ்யுவன் மறுத்திருக்கிறார்.

அதனையே காரணமாக்கி படப்பிடிப்பை தொடராமல் பாதியிலேயே விட்டுவிட்டு வடலூர் ஆதிரை சென்றுவிட்டார்.

அதன்பின் படத்தில் பணியாற்றிய இணை இயக்குநரைத் துணைக்கு வைத்துக் கொண்டு ஜேம்ஸ்யுவனே படத்தை இயக்கி முடித்திருக்கிறார். வடலூர் ஆதிரை போன பின்பு சுமார் ஆறு மாதங்கள் இப்படத்தின் வேலைகள் நடந்து கொண்டிருந்தன. அப்போதெல்லாம் எதுவும் பேசாமல் இருந்துவிட்டு இசை வெளியீட்டு விழா என்று அறிவித்ததும் இவ்வாறு அவர் சொல்வதில் உள்நோக்கம் இருக்கிறது” என்று தயாரிப்பாளர் தரப்பில் கூறப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

புதிய சாதனை படைத்த விராட்கோலியின் இன்ஸ்டா பதிவு!

வெறும் 185 ரூபாய் கட்டணத்தில் ஒரு வருட படிப்பு… கப்பலில் வேலைவாய்ப்பு!

ஓட தகுதியற்ற 10,000 அரசு பேருந்துகள்: சிஐடியு குற்றச்சாட்டு!

ஒலியை விட 10 மடங்கு வேகத்தில் உக்ரைனைத் தாக்கிய ரஷ்ய ஏவுகணை: 10 பேர் பலி!

+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *