சென்னை உயர் நீதிமன்றத்திற்கு புதிதாக 15 நீதிபதிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கான உத்தரவை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று (ஆகஸ்ட் 7) பிறப்பித்துள்ளார்.
வழக்கறிஞர்கள் கோவிந்தராஜன் கிருஷ்ணசாமி, ரஜினிஷ் பத்தியில், ரமேஷ் நடராஜன், ஜிகே முத்துக்குமார், ராமகிருஷ்ணன் ராஜேஷ் விவேகானந்தன், ராஜ்குமார் சங்கரநாராயணன், திலீப் குமார் நாகராஜன், எல்லப்பன் மனோகரன் ஆகியோர் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
நீதித்துறை அதிகாரிகளாக பணியாற்றி வந்த முருகன், சுமதி, அல்லி, திருமகள், சண்முகம் கார்த்திகேயன், முருகேசன் பாலுசாமி, ஞானசேகரன் ஆகியோரும் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 75 ஆகும். தற்போது பணியில் இருக்கும் நீதிபதிகளின் எண்ணிக்கை 51ஆகும்.
புதிதாக 15 பேர் நியமிக்கப்பட்டிருக்கும் நிலையில் இந்த எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது.
இன்னும் 9 நீதிபதிகள் பணியிடங்கள் காலியாக உள்ளன.
