நகைப்பிரியர்களுக்கு ஷாக்.. மாலையில் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை!

Published On:

| By Pandeeswari Gurusamy

gold

சென்னையில் இன்று (ஆகஸ்ட் 7) மாலை ஒரு சவரன் தங்கம் ரூ. 1200 வரை உயர்ந்துள்ளது.

சர்வதேச சந்தை நிலவரம், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு, உலகளாவிய தங்கத்தின் தேவை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. அந்த வகையில் தங்கம் விலை நேற்று முன்தினம் சவரனுக்கு ரூ.2,240 அதிகரித்து ஒரு சவரன் ரூ.1,07,840-க்கு விற்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக நேற்றும் தங்கம் விலை உயர்ந்தது. நேற்று மாலை நிலவரப்படி கிராமுக்கு ரூ.270-ம் சவரனுக்கு ரூ.2,160-ம் அதிரடியாக உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,750-க்கும் ஒரு சவரன் ரூ.1,10,000-க்கும் விற்பனையானது.

ADVERTISEMENT

இந்நிலையில் இன்று காலை தங்கம் விலையில் மாற்றம் இல்லாமல் இருந்தது. இன்று மாலை ஒரு கிராம் தங்கம் ரூ.150 உயர்ந்து ரூ.13,900க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.1200 உயர்ந்து ரூ.1,11,200க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல் 18 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.150 உயர்ந்து ரூ.11,715க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.1,200 வரை உயர்ந்து ரூ.93,720க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

இன்றைய வெள்ளி விலை

சென்னையில் இன்று வெள்ளி விலையில் மாற்றம் இல்லாமல் ஒரு கிராம் ரூ.250க்கும் ஒரு கிலோ ரூ.2,50,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 10 நாட்களில் தங்கம் விலை நிலவரம் (ஒரு சவரன்)

6-8-20261,10,000
5-8-20261,06,800
4-8-20261,05,600
3-8-20261,06,000
2-8-20261,05,760
1-8-20261,05,760
31-7-20261,06,040
30-7-20261,05,840
29-7-20261,05,240
28-7-20261,05,720

கடந்த 10 நாட்களில் வெள்ளி விலை நிலவரம் (ஒரு கிராம்)

6-8-2026250
5-8-2026240
4-8-2026235
3-8-2026235
2-8-2026235
1-8-2026235
31-7-2026235
30-7-2026235
29-7-2026235
28-7-2026235
Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share