‘வீர் சாவர்க்கர்’ திரைப்பட இயக்குநருக்கு தேசிய விருது!

Published On:

| By Mathi

National Award for 'Veer Savarkar' Film Director

மத்திய அரசு அறிவித்துள்ள 72-வது தேசிய திரைப்பட விருதுகளில், ‘சுதந்திர வீர் சாவர்க்கர்’ (Swatantrya Veer Savarkar) படத்திற்காக ரந்தீப் ஹூடா ‘சிறந்த அறிமுக இயக்குநர்’ (Best Debut Director) விருதை வென்றுள்ளார்.

இந்த திரைப்படம், சுதந்திரப் போராட்ட வீரர் விநாயக் தாமோதர் சாவர்க்கரின் வாழ்க்கை வரலாற்றைச் சித்தரிக்கிறது. சாவர்க்கரின் புரட்சிகரமான ஆரம்பகால நடவடிக்கைகள், அந்தமான் செல்லுலார் சிறையில் அவர் அனுபவித்த சித்திரவதைகள் மற்றும் அவரது இந்துத்துவ சித்தாந்தங்கள் குறித்த பார்வைகளை இப்படம் விவரிக்கிறது. இப்படத்தில் ரந்தீப் ஹூடா நடிகராக, இயக்குநராக, திரைக்கதை ஆசிரியராகவும் (Co-writer) பணியாற்றியுள்ளார்.

ADVERTISEMENT

தேசிய விருது குறித்து ரந்தீப் ஹூடா கூறுகையில், “நான் மிகவும் நன்றியுணர்வுடன் இருக்கிறேன். இதற்காக நான் மிகுந்த உழைப்பைச் செலுத்தினேன். சுதந்திர வீர் சாவர்க்கரின் வாழ்க்கை வரலாற்றையும், அவரது கருத்துகளையும் இந்த படத்தின் மூலம் புதிய தலைமுறைக்குக் கொண்டு செல்லும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. நான் இதற்காகக் கடுமையாக உழைத்தேன்; நடிப்பு, எழுத்து, இயக்கம் என அனைத்தையும் கவனித்துக் கொண்டேன், இறுதியாகப் படத்தைத் தயாரித்தும் உள்ளேன். அதனால், நான் மிகவும் நன்றியுடன் இருக்கிறேன்” என்றார்.

யார் இந்த வீர் சாவர்க்கர்?

இந்துத்துவா சித்தாந்தத்தின் முன்னோடிகளில் ஒருவரான வீர் சாவர்க்கர் மகாராஷ்டிரா மாநிலத்தின் நாசிக் (Nashik) மாவட்டத்தில் பாகூர் (Bhagur) என்ற கிராமத்தில் 1883-ம் ஆண்டு பிறந்தவர். மராத்திய சித்பவன் பிராமணக் குடும்பத்தைச் சேர்ந்தவர்.

ADVERTISEMENT

லண்டனில் இருந்தபோது ‘இந்தியா ஹவுஸ்’ (India House) மூலம் புரட்சிகர நடவடிக்கைகளை ஒருங்கிணைத்தார். ‘அபிநவ பாரத சமூகம்’ என்ற ரகசிய அமைப்பைத் தொடங்கினார். 1911-ல் கைது செய்யப்பட்டு, அந்தமான் செல்லுலார் சிறையில் அடைக்கப்பட்டார். வீர் சாவர்க்கரின் அந்தமான் சிறைவாசம் தொடர்பாக ஏராளமான ‘புனைவுகளும்’ விவாதங்களுக்குள்ளாகி இருக்கின்றன. அந்தமான் சிறையில் இருந்தபோது, பிரிட்டிஷ் அரசுக்கு அவர் பலமுறை மன்னிப்புக் கடிதங்களை எழுதியது மிகப்பெரிய சர்ச்சையாக உள்ளது.

சிறையில் விடுதலையான பிறகு பிரிட்டிஷ் அரசுடன் அவர் இணக்கமாகச் செயல்பட்டதாகக் கூறி, விமர்சகர்கள் அவரை ‘ஆங்கிலேயர்களின் ஏஜென்ட்’ என்றும், சுதந்திரப் போராட்டத்தில் போதிய பங்களிக்கவில்லை என்றும் விமர்சிக்கின்றனர்.

ADVERTISEMENT

இன்றைய பாஜகவின் தாய் அமைப்புகளில் ஒன்றான இந்து மகாசபையின் தலைவராகவும் இருந்தவர்.

மகாத்மா காந்தியைப் படுகொலை செய்த வழக்கில் சாவர்க்கர் குற்றம் சாட்டப்பட்டார். இருப்பினும், போதிய ஆதாரங்கள் இல்லாததால் அவர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

72-வது தேசிய திரைப்பட விருதுகள்

  • சிறந்த தமிழ் படம் – ராயன்-
  • சிறந்த தெலுங்கு படம் – கமிட்டி குர்ரோலு(Committee Kurrollu)
  • சிறந்த மலையாளம் படம் – ஃபெமினிச்சி ஃபாத்திமா(Feminichi Fathima)
  • சிறந்த கன்னடம் படம் – மித்யா (Mithya)-
  • சிறந்த இந்தி படம் – ஸ்ரீகாந்த் (Srikanth)
  • சிறந்த சண்டைப் பயிற்சி – அனல் அரசு (மகாராஜா)
    -சிறந்த நடன அமைப்பாளர் – விஜய் கங்குலி (ஆஜ் கி ராத், ஸ்ட்ரீ 2)
  • சிறந்த இசையமைப்பாளர் – (பின்னணி இசை) – ஜி.வி. பிரகாஷ் குமார் (அமரன்)
  • சிறந்த இசையமைப்பாளர் (பாடல்) – சாஸ்வத் சச்தேவ் (ஆர்டிக்கிள் 370 (இந்தி)
  • சிறந்த ஒப்பனை – பி ரவி குமார்(கமிட்டி குர்ரோலு -தெலுங்கு)
  • சிறந்த ஆடை வடிவமைப்பாளர் – தீபாலி நூர் மற்றும் ஷீத்தல் ஷர்மா(புஷ்பா 2)
  • சிறந்த தயாரிப்பு வடிவமைப்பாளர் – நிதின் ஜிஹானி சௌத்ரி (கல்கி 2898 ஏடி (தெலுங்கு))
    -சிறந்த ஒலி வடிவமைப்பு – மானஸ் சௌத்ரி (பூல் புலையா 3 (இந்தி)
    -சிறந்த திரைக்கதை (வசனகர்த்தா) – வெங்கி அட்லூரி (லக்கி பாஸ்கர் -தெலுங்கு)
    -சிறந்த திரைக்கதை – யோகேஷ் தேஷ்பாண்டே (ஸ்வர்க்ககந்தர்வ சுதிர் ஃபட்கே -மராத்தி)
    -சிறந்த திரைக்கதை – சுகுமார் (புஷ்பா 2 – தெலுங்கு)
    -சிறந்த ஒளிப்பதிவாளர் – ஷெஹ்னாத் ஜலால் (பிரம்மயுகம் -மலையாளம்)
  • சிறந்த பின்னணி பாடகி – வைக்கம் விஜயலட்சுமி ( அங்கு வானக் கோணிலு…- ஏ.ஆர்.எம். – மலையாளம்)
  • சிறந்த பின்னணி பாடகர் – அபய் ஜோத்புர்கர் (கராத் கணபதி – மராத்தி)
  • சிறந்த குழந்தை நடிகர் – ரித்திமான் பானர்ஜி, தபோமோய் தேப், கீதாஸ்ரீ சக்ரவர்த்தி
  • சிறந்த துணை நடிகை – ரூபா வர்கடி (மித்யா – கன்னடம்)
  • சிறந்த துணை நடிகை – சச்சனா நமிதாஸ் (மகாராஜா)
  • சிறந்த துணை நடிகர் – சஞ்சய் மிஸ்ரா (பக்ஷக் -இந்தி)
  • சிறந்த நடிகர் – கார்த்திக் ஆர்யன்(சந்து சாம்பியன் – இந்தி))
  • சிறந்த நடிகர் – மம்மூட்டி (பிரம்மயுகம் – மலையாளம்)
  • சிறந்த இயக்குநர் – ராஜ்குமார் பெரியசாமி (அமரன்)
  • சிறந்த குழந்தை படம் – 35 சின்ன கதா காடு (தெலுங்கு)
  • சிறந்த சமூக அக்கறைக்கான படம் – கேப்டன் மில்லர்
  • சிறந்த பொழுதுபோக்குக்கான படம் – கல்கி 2898 ஏடி
  • சிறந்த படம் – ஆர்ட்டிக்கிள் 370 (இந்தி)

சிறப்பு விருதுகள்:

  • மெய்யழகன் (ஒலிக்கலவை) – சுரேன் ஜி
  • கேப்டன் மில்லர் (நடிகர்) – தனுஷ்
Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share