6 தேசிய விருதுகள்.. நடிகர் தனுஷின் ஆடுகளம் முதல் கேப்டன் மில்லர் வரை!

Published On:

| By Mathi

National Awards: A Rewind of Dhanush’s Journey from 'Aadukalam' to 'Captain Miller'

2024-ம் ஆண்டு வெளியான திரைப்படங்களில் நடிகர் தனுஷின் ராயன், கேப்டர் மில்லர் படங்களுக்கு தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதற்கு முன்னதாக தனுஷ் சிறந்த நடிகராகவும், தயாரிப்பாளராகவும் மொத்தம் 4 தேசிய விருதுகளைப் பெற்றிருந்தார். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 72-வது தேசிய திரைப்பட விருதுகளில் அவருக்கு கூடுதலாக 2 விருதுகள் கிடைத்துள்ளன.

ADVERTISEMENT

தனுஷ் பெற்ற தேசிய விருதுகள்..

  • சிறந்த நடிகர் (ஆடுகளம் – 2010)
  • சிறந்த குழந்தைகள் திரைப்படம் (காக்கா முட்டை – தயாரிப்பாளர், 2014)
  • சிறந்த தமிழ்த் திரைப்படம் (விசாரணை – தயாரிப்பாளர், 2015)
  • சிறந்த நடிகர் (அசுரன் – 2019)
  • சிறந்த நடிகர் ( ராயன் சிறப்பு விருது – 2024)
  • சிறந்த சமூக அக்கறைத் திரைப்படம் (கேப்டன் மில்லர் – 2024)

தனுஷ் இதுவரை தனது நடிப்புத் திறமைக்காக இரண்டு முறை சிறந்த நடிகருக்கான தேசிய விருதினையும், இந்த ஆண்டு (2026) ஒரு சிறப்பு விருதினையும் வென்றுள்ளார்.

ADVERTISEMENT

தேசிய விருதை தனுஷுக்கு பெற்று தந்த திரைப்படங்கள்

ஆடுகளம் (2010)


வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான இப்படம், மதுரை பின்னணியில் சேவல் சண்டையை மையமாகக் கொண்டது. கருப்பு’ என்ற கதாபாத்திரத்தில் தனுஷ் மிக யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். மதுரை வட்டாரப் பகுதியின் ‘கொண்டே போடுவேன்’ பாணியின் பேச்சு வழக்கு, உடல்மொழி மற்றும் ஒரு சேவல் சண்டை வீரனின் போராட்டத்தை மிக நேர்த்தியாகப் பதிவு செய்ததற்காக அவருக்கு முதல்முறை சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது.

ADVERTISEMENT

அசுரன் (2019)


தமிழ் சமூகத்தை உலுக்கிய திரைப்படம் அசுரன். அண்மையில் மறைந்த பூமணி எழுதிய ‘வெக்கை’ நாவலைத் தழுவி, வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான திரைப்படம் இது.

‘சிவசாமியாக’ முதியவர் தோற்றத்தில் தனுஷ் மிரட்டியிருப்பார். தன் குடும்பத்தைக் காப்பாற்றத் துடிக்கும் ஒரு தந்தை, தன் கடந்த கால வன்முறையை மறைக்கப் போராடும் விதம் என, இரண்டு வெவ்வேறு வயதுடைய கதாபாத்திரத்தின் பரிமாணங்களை தனுஷ் சிறப்பாகக் கையாண்டிருப்பார். இது அவரது திரைப்பயணத்தின் மிகச்சிறந்த நடிப்பாகக் கருதப்படுகிறது.

கேப்டன் மில்லர் (2024)

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வெளியான இப்படத்தில், சுதந்திரப் போராட்ட கால பின்னணியில் ஒரு புரட்சியாளராகத் தனுஷ் நடித்திருப்பார். இன்று (ஜூலை 18) அறிவிக்கப்பட்ட 72-வது தேசிய திரைப்பட விருதுகளில், இப்படத்திற்காக தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான சிறப்பு விருது (Special Mention) வழங்கப்பட்டுள்ளது. ஆக்‌ஷன் மற்றும் உணர்ச்சிகரமான காட்சிகளில் தனுஷ் வெளிப்படுத்திய தீவிரத்திற்காக இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share