ராயன், அமரன், மெய்யழகன், கேப்டன் மில்லர்… தேசிய விருதுகள் அறிவிப்பு!

Published On:

| By Kavi

தனுஷ் இயக்கி நடித்த ‘ராயன்’ திரைப்படம் சிறந்த படத்துக்கான தேசிய விருதுக்கு தேர்வாகியுள்ளது.

2024 ஆம் ஆண்டு மத்திய தணிக்கை வாரியத்தால் சான்று அளிக்கப்பட்ட திரைப்படங்களுக்கு இன்று (ஜூலை 18) தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டன.

ADVERTISEMENT

சிறந்த படம், நடிகர், நடிகைகள், ஒளிப்பதிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளுக்கு தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டது.

இதில் தமிழ் சினிமாவில் இருந்து சிறந்த படத்துக்கான விருதுக்கு, நடிகர் தனுஷ் இயக்கி நடித்த ‘ராயன்’ படம் தேர்வாகியுள்ளது.

ADVERTISEMENT

அமரன் படம் 3 தேசிய விருதுகளுக்கு தேர்வாகியுள்ளது. இந்தப் படத்துக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் சிறந்த இசையமைப்பாளர் விருதுக்கும், சிறந்த படத்தொகுப்பு கலைவாணனுக்கும், சிறந்த இயக்குனர் விருது ராஜ்குமார் பெரியசாமிக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது,

கேப்டன் மில்லர் படத்தில் நடித்த தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான சிறப்பு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சமூக மற்றும் தேசிய நலனுக்காக எடுக்கப்படும் திரைப்படம் பிரிவிலும் கேப்டன் மில்லர் படம் தேர்வாகியுள்ளது.

ADVERTISEMENT

மெய்யழகன் படத்தில் பணியாற்றிய பொறியாளர் சுரேன் ஜிக்கு சிறந்த ஒலிக்கலவையாளர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த துணை நடிகை விருதுக்கு மகாராஜா படத்தில் நடித்த சாச்சனா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மகாராஜா படத்திற்காக அனல் அரசுக்கு சிறந்த சண்டைப் பயிற்சியாளருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த திரைக்கதை வசனத்திற்கான தேசிய விருதுக்கு, லக்கி பாஸ்கர் இயக்குநர் வெங்கீ அட்லூரி தேர்வாகியுள்ளார்.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share