திடீரென கூட்டத்தில் எழுந்த “விஜய் சார்” கோஷம் : மேடையில் த்ரிஷா கொடுத்த ரியாக்ஷன்!

Published On:

| By Kavi

நடிகை திரிஷா ஆஸ்திரேலியாவில் கடை திறப்பு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

40 வயதைக் கடந்த நடிகை திரிஷா இன்னும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

ADVERTISEMENT

தமிழில் கடைசியாக அவர் சூர்யாவுடன் இணைந்து நடித்த கருப்பு திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

சினிமாவில் தன்னை பிஸியாக வைத்திருக்கும் திரிஷா ஆஸ்திரேலியா, சிட்னி நகரில் நடைபெற்ற கடை திறப்பு நிகழ்ச்சியில் இன்று கலந்து கொண்டார்.

ADVERTISEMENT

அந்தக் கடையை திறந்து வைத்து, அங்கு திரண்டிருந்தவர்கள் மத்தியில் திரிஷா பேசினார்.

“நான் என் வேலை காரணமாக பல்வேறு நாடுகளுக்கு சென்று வந்திருக்கிறேன். ஆனால் ஆஸ்திரேலியா, குறிப்பாக சிட்னி நகரம் எனக்கு மிகவும் பிடித்த இடம் ஆகும்” என்று கூறினார்.

ADVERTISEMENT

தன்னுடைய படங்களை பார்த்து ஆதரவு தெரிவிப்பதற்கு நன்றி என கூறிய திரிஷாவிடம் கூட்டத்தில் இருந்த சிலர், விஜய் சாரை கேட்டதாக சொல்லுங்கள் என கோஷம் எழுப்பினர்.

சிலர் தமிழில் பேசுங்கள் என்றும் கோஷம் எழுப்பினர்.

இந்த சூழலில், முதல்வர் விஜய் பற்றிய கேள்வியை தவிர்த்த திரிஷா, தமிழில் பேசுங்கள் என்று கூறியவர்களுக்கு மட்டும் பதில் அளித்தார். “தனக்கு இலங்கைத் தமிழ் மிகவும் பிடிக்கும். ஆனால் அது பேச வராது. சென்னை தமிழ் தனக்கு நன்றாகவே வரும் எனக் குறிப்பிட்டதுடன்,

அங்கு கூடியிருந்த கூட்டத்தில் சிலர் தெலுங்கிலும் பேசியதைக் கேட்டு, இங்கு பல இந்திய மொழிகளை பேசுபவர்கள் இருப்பதால் தான் ஆங்கிலத்தில் பேசத் தொடங்கியதாகக் கூறினார்.

மேலும், அங்குள்ளவர்களின் தமிழ் மிகவும் அழகாகவும், தூய்மையாகவும் இருப்பதாகப் பாராட்டினார்.

இந்த நிகழ்ச்சியில் திரிஷா சாக்லேட் பிரவுன் நிறத்தில் உடை அணிந்திருந்தது அவருக்கு மிகவும் பொருத்தமாக இருந்தது. இந்த புகைப்படத்தை இணையத்தில் பகிரும் நெட்டிசன்கள், ஸ்டைலிஷ் குயின் என கூறி வருகின்றனர்.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share