இன்று இணையதளங்களில் வைரலான மீம்ஸ் மற்றும் ட்ரோல்களை பார்த்து ரிலாக்ஸ் ஆகலாம் வாங்க

ச ப் பா ணி
ஆடி ஆஃபர்ல 5000 சேமிச்சோம்னு நினைச்சு..
15,000 செலவு பண்ணதை மறந்துடுறோம்

மனமே
ஆடி: மனைவிகளுக்கு தள்ளுபடி
என்றால் கொண்டாடம்.
ஆடி: கணவன்களுக்கு
மனைவியை அம்மா வீட்டுக்கு தள்ளி விடுவதில் கொண்டாட்டம்.

Writer SJB
உன்ன பிரிஞ்சு ஒரு நாள் கூட என்னால இருக்க முடியாதுன்னு மனைவிகிட்ட சொன்னதும்
இன்னைக்கு ஆடி ஒன்னு எப்ப வந்து உங்க மகளை கூட்டிட்டு போறீங்கன்னு மாமியார் கிட்ட சொன்னதும் ஒரே ஆளா..???

Mannar & company
‘ஆடி தள்ளுபடி’ன்னு எழுதினாலே தேவையில்லாத பொருள்கூட
“தேவையானது” மாதிரி தோணும்
அதுதான் Marketing-ன் மகிமை!
-ஆடி #தள்ளுபடி
அண்ணாச்சி
45 ஆண்டுகளில் எந்த முதலமைச்சருக்கும் இல்லாத தைரியம்.. ஒரே மாதத்தில் செய்த விஜய்.. அன்புமணி பாராட்டு
# சரி… சரி… புரியுது..!!

செங்காந்தள்
தனிக் குடும்பத்தை மீண்டும் உடைத்தத பாவம் ஸ்மார்ட் போன்களையே சேரும்…!
Mannar & company
‘காலப்போக்கில் எல்லாம் மாறும்” இந்த வார்த்தை மட்டும் என்றும் மாறாது!

M.R.ராதா ரசிகன்
“பாத்தா IMAX’ல மட்டும் தான் பாப்பேன் இல்ல பாக்கவே மாட்டேன்..”
‘எந்த ஊர் நீங்க..’
“மதுரை பக்கத்துல வாடிபட்டி…”

Caroline
நம்ம வாழ்க்கையே ஆடி தான் போயிட்டு இருக்கு….
இதுல ஆடி மாசம் காமெடி நமக்கு தேவையா
லாக் ஆஃப்
