தமிழக முதல்வர் விஜய்யை நடிகர் சிவகார்த்திகேயன் நேற்று (ஜூலை 15) நேரில் சந்தித்துப் பேசினார்.
பிரபல நடிகராக வலம் வந்த விஜய் முதல்வராகப் பதவியேற்றது முதல் திரைத்துறையைச் சேர்ந்த பலரும் அவரைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நேற்று நடிகர் சிவகார்த்திகேயன் விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
இதுகுறித்து சிவகார்த்திகேயன் தனது எக்ஸ் பதிவில், “மக்களின் மனங்களை மகிழ்விப்பதில் தொடங்கி, மாநிலத்தை வழிநடத்துவது வரை… சில பயணங்கள் உண்மையிலேயே அசாத்தியமானவை!
நம் தமிழகத்தின் மாண்புமிகு முதலமைச்சர், C. ஜோசப் விஜய் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துப் தெரிவித்தது ஒரு பெருமைக்குரிய தருணம்.
‘ரசிகன் எக்ஸ்பிரஸ்’ முதல், ‘விஜய் அவார்ட்ஸ்’ மேடை வரை, ‘கோட்’ (GOAT) திரைப்படத்தில் இணைந்து நடித்தது முதல், இப்போது உங்களுடன் இருக்கும் இந்தத் தருணம் வரை… இது எப்போதுமே எனக்கு மிகவும் சிறப்பானதாகவே இருக்கும்
இந்தச் சகோதரத்துவமும், பிணைப்பும்… என்றும் தொடரும்!” என தெரிவித்தார்.
