”ஒரண்ட” என்ற புதிய படத்தின் மூலம் இயக்குநர் சுசி கணேசன் மீண்டும் தமிழ் சினிமாவுக்கு வருகிறார்.
சுசி கணேசன் 2002-ல் ‘ஃபைவ் ஸ்டார்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இப்படத்தில் பிரசன்னா மற்றும் கனிகா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படம், கல்லூரி நண்பர்களை மையமாக கொண்டது.
அதே ஆண்டில், அவர் ‘விரும்புகிறேன்’ படத்தை இயக்கினார். அதனைத் தொடர்ந்து, ஜீவன் மற்றும் சோனியா அகர்வால் நடிப்பில் ‘திருட்டுப் பயலே’ (2006) படத்தையும் இயக்கினார்.
2017ல் பாபி சிம்ஹா, பிரசன்னா மற்றும் அமலா பால் ஆகியோர் நடிப்பில், சுசி கணேசன் இயக்கத்தில் திருட்டுப் பயலே 2 வெளியானது.
பின்னர் கன்னடத்தில் ‘100’ என்றும், இந்தியில் ‘குஸ்பைத்தியா’ என்றும் ரீமேக் செய்யப்பட்டது.
இந்த படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் வெளியாகியுள்ளது. இதன்மூலம் இப்படம் ஒரு அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் கதைக்களம் மற்றும் நடிகர்கள் போன்ற முக்கிய விவரங்களை ரகசியமாக வைத்துள்ளது படக்குழு. சுமார் 85 சதவீத படபிடிப்பு ஏற்கனவே முடிவடைந்துவிட்டதாகவும் படக்குழு தரப்பில் கூறப்படுகிறது.
இந்த படம் தொடர்பாக சுசி கணேசன் தனது எக்ஸ் பக்கத்தில், ” ’ஒரண்ட’ பொருள் என்ன? இது ஆங்கிலத்தில், ’கண்ணுக்குத் தெரியாத சக்தி’ , ’ஆன்மீகம்’ , மந்திர சக்தி’ , ’உணர்ச்சிவசப்படும் மனப்பான்மை’ , ’மர்மமான சக்தி’… இதில், இந்தப் படம் எதைப் பற்றிப் பேசப்போகிறது?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
