72-வது தேசிய திரைப்பட விருதுகளில், நடிகர் தனுஷ் இயக்கி நடித்த ‘ராயன்’ திரைப்படம் ‘சிறந்த தமிழ்ப் படத்திற்கான’ (Best Regional Film – Tamil) தேசிய விருதை வென்றுள்ளது. தனுஷுக்கு திரை உலகத்தினர் பாராட்டுகளை தெரிவித்தாலும் சமூக வலைதளங்களில் மிக கடுமையான விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.
சமூக வலைதளமான X பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ள கருத்துகள்:
@skpkaruna: ராயன், கேப்டன் மில்லர் போன்ற திரைக்காவியங்களுடன் மெய்யழகன், மகாராஜா போன்ற புதிய முயற்சிகளும் தேசிய விருது பெற்றன! தேர்வுக்குழுவினர் கேசரியிலே காரக்குழம்பு ஊத்தி பிசைஞ்சு சாப்பிட்டுருக்காங்க
@JDALEXtweets: என்னது ராயனுக்கு தேசிய விருதா?
@sapienno_: தங்கலான் படத்துக்கு தேசிய விருது கண்டிப்பா குடுத்துருக்கணும்..
கதை, நடிப்பு, இயக்கம்னு ராயன விட பல மடங்கு சிறப்பா இருக்கும். அந்த குழுவினர் எந்த அடிப்படைல ராயன் மற்றும் கேப்டன் மீல்லருக்கு குடுத்தானுங்கனு புரியல..
@Anthanan_Offl: தேசிய விருது… ராயன் சிறந்த படமாம். மெய்யழகன் படத்திற்கு சிறந்த ஒலி (Sound ) கலவைக்கான விருதாம். நல்லா இருக்குய்யா ஒங்க ஜட்ஜிமென்ட்
@urs_venbaa: கேப்டன் மில்லர் – சிறந்த நடிகர் ராயன்-சிறந்த தமிழ்ப் படம் ~தனுஷ்: அதான எப்பிடினு எனக்கும் தெரியல
@teacharrgekadai: காஞ்சிவரம்…படத்துக்கு தேசிய விருது கிடைச்சு இருக்குன்னு அறிவிப்பு வந்ததும் அப்படின்னா …! நல்ல படமா தான் இருக்கும் கண்டிப்பா பார்க்கனும்னு தேசிய விருது பெற்றமைக்காக தேடிப் பார்த்த படங்கள் நிறைய இருக்கு… ஆனா ராயன் …??? காலையில 4:30 மணிக்கு எந்த ஊர்லடா fried rice கிண்டுறானுகன்னு கிண்டலுக்கு உண்டான படம் …தேசிய விருது எப்படி…?
@Elan87932021: ராயன் படத்துக்கு தேசிய விருது கொடுத்ததும் 2026 சட்டமன்ற தேர்தலில் தவெக ஜெயிச்சதும் ஒன்னு தான்! இரண்டுமே முட்டாள்களால் தேர்ந்தெடுக்கப்பட்டது!
@tn2point0:”ராயன்” திரைப்படம் விறுவிறுப்பாக இருக்கும், ஆனால் தேசிய விருது வாங்கும் அளவுக்கு அதில் ஏதும் இருப்பதாக தெரியவில்லை. 2024ம் ஆண்டின் “சிறந்த தமிழ் படம்” விருதைப் பெற வேறு படமே இல்லையா?!
@kanapraba: ராயன் சிறந்த தமிழ்ப் படம் என்று தேசிய விருது அறிவிப்பு. தேசிய விருதுப் படம் என்றால் நடுவர் மட்டும் பார்த்துட்டு பத்திரமா அதை ட்ரங்க் பெட்டிக்குள் வச்சுடுவாங்க என்று முன்னொரு காலத்தில் சாலமன் பாப்பையா சொன்னது ஞாபகத்துக்கு வருது
@ponkalivis77324: யோவ் என்னடா இந்த படத்துல என்ன இருக்குனு ராயன் மற்றும் கேப்டன் மில்லர் ரெண்டு படங்கள் ஒரு வாரத்தில் தியேட்டர் விட்டு காலியான படங்கள் நல்ல கதை கிடையாது திரைக்கதை பாட்டு எதுவும் கிடையாது வன்முறை மட்டும் தான் நல்ல படங்கள் எத்தனை இருக்கு மகாராஜா வாழை இன்னும் நிறைய
@Sabarish_twittz: தமிழில் சிறந்த படமாக ராயன் படத்திற்கு தேசிய விருது # தமிழ் சினிமாவுக்கு இப்படியொரு நிலைமையா…
@vrv193: ராயன் படம் national award க்கு பெருமபட ஒன்னும் இல்ல னா
@saranya12121989: எதன் அடிப்படையில் ராயன் படத்துக்கு தேசிய விருது,… அண்ணன் தம்பி தங்கச்சி குள்ளேயே அடிச்சிகிட்டு சாவாய்ங்களே அதுக்கு..
@DasthuB: ‘ராயன்’ படத்திற்கு தேசிய விருது… எனக்கு ஒன்னு மட்டும் புரியல… இந்தப் படத்தில் அப்படி என்ன heavyயா இருந்துச்சு, சிறந்த தமிழ்ப்படம் தேசிய விருது கொடுக்க?
@ValuBoy: ஏன்டா காலைல 5 மணிக்கு சிக்கன் ரைஸ் கடைய திறக்க போற மாதிரி ஒரு சீன் இருக்கு ராயன் படத்துல.. அந்த படத்துக்கு National Award வேறயா. National Award க்கு உண்டான மரியாதை போச்சுடா உங்களால. ஆல்ரெடி கேசரி படத்துக்கு கொடுத்தப்பவே போயிருச்சு அப்படிங்கிறது வேற விஷயம்.
@Vrsamy03: நாங்க அமரனுக்கு அவார்டு கேக்கல சார், ஆனா ராயன விட எவ்வளவோ நல்ல படம் இருக்கு, அதுக்கு அவார்டு கொடுத்துருக்கலாம்னுதான் சார் கேக்குறோம்.
@Michel_Offl: ராயன் படத்த விட லப்பர் பந்துக்கு என்னடா குற? ராயன் நல்லா இல்லன்னு சொல்ல வரல. ஆன அவார்ட் வாங்குற அளவுக்கு ஒன்னும் நல்ல படம் இல்ல. எனக்கு என்னமோ தனுஷ் மேல சந்தேகமா இருக்கு உள்ள அவங்க ஆளு யாரவது இருப்பாங்களோ? அத விட இப்போ காசு வாரி இறச்சாலே இந்த அவார்ட் எல்லாம் ஈஸியா கெடச்சிரும்ன்னு சொல்லுறாங்களே உண்மையா அது?
@itzmetamilselvi: தேசிய விருது கொடுக்கிற அளவுக்கு ராயன் திரைப்படம் அவ்வளவு சிறந்த திரைப்படமா?
