சென்னையில் மழைக்கு வாய்ப்பு!

By Balaji

|

Published on 19 Dec 2017, 12:00 AM

அந்தமானைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகியிருப்பதால் சென்னையில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடல் பரப்பிலிருந்து குளிர்ந்த காற்று வடகிழக்கு மற்றும் கிழக்கு திசையை நோக்கி வீசியது. இதன் காரணமாக மழை மேகங்கள் உருவாவது, காற்றினால் முறியடிக்கப்பட்டுவிட்டது. இந்தச் சூழ்நிலையில், ஒரு புதிய குறைந்த காற்றழுத்த மண்டலம் தென் அந்தமான் மற்றும் அதன் அருகில் உள்ள பகுதிகளில் உருவாகியுள்ளது. இதனால் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ள சில இடங்களில் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. சென்னை ஓரளவு மேகமூட்டமாக இருக்கும். நகரத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது” என்று தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

தனியார் வானிலை ஆய்வு மையமான ஸ்கைமெட், “சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் டிசம்பர் 19 முதல் 21ஆம் தேதி வரை இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கூறியுள்ளது.,”

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Balaji

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel