கிச்சன் கீர்த்தனா: மட்டன் முருங்கைக்கீரை சூப்

Published On:

| By Minnambalam

Mutton Drumstick Leaves Soup

வாரத்தின் முதல் வேலை நாளான இன்று… காலை நேர உணவுக்கு என்ன செய்வது என்ற குழப்பம் பலருக்கும் வரும். இந்த நிலையில் சிற்றுண்டிக்கு பதில் இந்த சூப் செய்து  சுவைத்தால் ஆரோக்கியம் பன்மடங்கு கூடும். நாள் முழுக்க புத்துணர்ச்சியுடன் வலம் வருவீர்கள்.

என்ன தேவை?

ADVERTISEMENT

எலும்புள்ள மட்டன் துண்டுகள் – 150 கிராம்
முருங்கைக் கீரை – ஒரு கைப்பிடி அளவு
கேரட் – ஒன்று
தக்காளி – 2
பிரிஞ்சி இலை – ஒன்று
மிளகுத்தூள் – ஒன்றரை டீஸ்பூன்
பெரிய வெங்காயம் – ஒன்றில் பாதி
சீரகத்தூள் – ஒரு டீஸ்பூன்
பச்சை மிளகாய்- 2
இஞ்சி – ஒரு துண்டு
பூண்டு – 6 பல்
மல்லித்தூள் (தனியாத்தூள் ) – ஒரு டீஸ்பூன்
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை – சிறிதளவு
கறிவேப்பிலை – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
தண்ணீர் – ஒன்றரை லிட்டர்

எப்படிச் செய்வது?

ADVERTISEMENT

மட்டனை சற்று பெரிய துண்டுகளாக நறுக்கி, சுத்தம் செய்து கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை, பிரிஞ்சி இலை, சேர்த்து நிறம் மாற வதக்கி, முருங்கைக்கீரையைச் சேர்த்து வதக்கவும். இத்துடன் மீடியம் சைஸில் நறுக்கிய கேரட், தக்காளி சேர்த்து வதக்கவும். இதில், சீரகத்தூள், மிளகுத்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), மஞ்சள்தூள், உப்பு சேர்த்து மசாலா வாசனை போகும்வரை வதக்கி, தண்ணீர் ஊற்றி மட்டன் துண்டுகளைச் சேர்த்து வேகவிடவும். மட்டன் வெந்ததும் கொத்தமல்லித்தழையைத் தூவி பரிமாறவும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ADVERTISEMENT

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் – சாப்பிட்டவுடன் வாழைப்பழம் சாப்பிடுவது நல்லதல்ல… ஏன்?

கிச்சன் கீர்த்தனா: நாவல் பழ ஜெல்லி

தாத்தா ரீ என்ட்ரி: அப்டேட் குமாரு

கலைஞர் நினைவுநாள் அமைதிப் பேரணியில் அணி திரள்வோம்: ஸ்டாலின் கடிதம்!

Photo of author
Minnambalam
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share