போகிற போக்கில் சொன்ன வார்த்தை… மனிதரை குரங்காக மாற்றிய போலி செய்தி!

Published On:

| By Kumaresan M

குரங்கு கடித்ததால் பாதிக்கப்பட்ட ஒருவர் சிவகங்கை அரசு மருத்துவமனையில் குரங்குபோல நடந்துகொண்டதோடு, மக்களை தாக்கியதாக செய்தி இணையத்தில் பரவியது. ஆனால், இந்த சம்பவம் உண்மையில்லை என்பது தெரிய வந்துள்ளது.

சிவகங்கை மாவட்டம், காளையார்கோயிலை சேர்ந்த சரவணன் மனநலம் பாதிக்கப்பட்டவர்.  காளையார்கோயில் அரசு மருத்துவமனையில் மனநல சிகிச்சை எடுத்து வந்ததுள்ளார். மனநோயின் தாக்கம் திடீரென்று அதிகரித்துள்ளது.

இதனால், வீட்டில் இருந்து காளையார்கோயில் அரசு மருத்துவமனைக்கு சரவணனை அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு சிகிச்சை அளிக்க மனநல மருத்துவர் இல்லை. தொடர்ந்து, ஆம்புலன்ஸ் மூலம் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அப்போது, ஆம்புலன்ஸிலிருந்து இறங்கி மருத்துவமனைக்குள் வர மறுத்த சரவணனை கஷ்டப்பட்டு தூக்கி  வந்தனர். இந்த சமயத்தில் பாதுகாவலர்களிடத்தில் இருந்து தப்பிய அவர் அங்கிருந்த கதவில் ஏறி தொங்கியபடி, விசித்திரமாகக் கூச்சல் போட்டார். அவரை கதவில் இருந்து இறக்கிவிட முயன்ற பாதுகாவலர்களை தாக்கவும் செய்தார். இந்த காட்சியை அங்கிருந்த பலரும் இதை வீடியோவாக எடுத்துள்ளனர்.

இந்த சமயத்தில் அங்கிருந்த ஒருவர், சரவணனை பார்த்து பாவம்…  குரங்கு கடித்ததால் குரங்கு போல நடந்து கொள்வதாக சும்மா போகிற போக்கில் கூறி சென்றுள்ளார். இதையடுத்து, பலரும் குரங்கு கடித்ததால், சரவணன் குரங்கு போல மாறி விட்டதாக போலி செய்தியை பரப்பினர். இந்த வீடியோவை வாட்ஸப்பிலும் பரப்ப தொடங்கினர்.

சரவணனின் செய்கையும் குரங்கு போலவே இருந்ததால், உண்மை நிலவரம் தெரியாத பலரும் இந்த தகவலை நம்பி விட்டனர். குரங்கு கடித்தால், இப்படியெல்லாம் ஆகுமா? என்று சிந்திக்குமளவுக்கு போலி செய்தி பரப்புவர்கள் மக்களை யோசிக்க வைத்து விட்டனர்.

சிவகங்கை மாவட்டத்தில் குரங்கு கடித்து சிகிச்சை பெற்று வந்தவர் திடீரென குரங்கு போன்று செய்த செயல்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன் 

ஆம்ஸ்ட்ராங் கொலை… இயக்குனர் நெல்சன் மனைவியிடம் விசாரணை!

செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கு தீர்ப்பு… மீண்டும் ஒத்திவைப்பு!

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share