விஜய்க்கு மோடி வாழ்த்து

Published On:

| By Kavi

தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்துக்கு பிரதமர் மோடி வாழ்த்து கூறியுள்ளார். 

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், 

ADVERTISEMENT

“தமிழக சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு  ஆதரவளித்த தமிழக வாக்காளர்களுக்கு எனது நன்றிகள். மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதிலும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதிலும் நாங்கள் எப்போதும் முன்னணியில் இருப்போம்.

சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியுள்ள தமிழக வெற்றிக் கழகத்திற்கு  எனது பாராட்டுகள்.

ADVERTISEMENT

தமிழகத்தின் முன்னேற்றத்திற்கும், தமிழக மக்களின் நலனை மேம்படுத்துவதற்கும் மத்திய அரசு அனைத்து முயற்சிகளையும் தொடர்ந்து மேற்கொள்ளும்.” என்று பதிவிட்டுள்ளார். 

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share