தமிழை விட சமஸ்கிருதத்திற்கு 22 மடங்கு அதிக நிதி ஒதுக்கீடு… மத்திய அரசின் ஓரவஞ்சனை அம்பலம்!

Published On:

| By christopher

modi allocate fund to sanskrit 22 times than tamil

தமிழ் உள்ளிட்ட பிற செம்மொழிகளை புறக்கணித்து சமஸ்கிருதத்திற்கு அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது தகவல் அறியும் உரிமை (RTI) மூலம் அம்பலமாகியுள்ளது. modi allocate fund to sanskrit 22 times than tamil

மாநிலங்கள் மற்றும் மொழிகளுக்கான நிதி ஒதுக்கீட்டில் மத்திய அரசு பாரபட்சம் காட்டிவருவதாக தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநில அரசுகள் தொடர்ந்து குற்றச்சாட்டி வருகின்றன.

ADVERTISEMENT

இந்த நிலையில், 2014 முதல் 2025 வரை என கடந்த சமஸ்கிருத மொழி மேம்பாட்டுக்கு ரூ.2,533 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது தகவல் உரிமைச் சட்டத்தில் தெரியவந்துள்ளது.

குறிப்பாக தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மற்ற 5 செம்மொழிகளுக்கு ஆண்டுக்கு வெறும் ரூ.13 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதுதொடர்பாக மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா இன்று (ஜூன் 24) வெளியிட்ட அறிக்கையில், “2014-15 முதல் 2024-25 வரையிலான பத்து ஆண்டுகளில் ஒன்றிய அரசு சமஸ்கிருத மொழியைப் பரப்ப ரூ.2532.59 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஒரியா ஆகிய ஐந்து செம்மொழிகளுக்குச் சேர்த்து ஒதுக்கப்பட்ட ₹147.56 கோடியை விட 17 மடங்கு அதிகமாகும் என்று தகவல் அறியும் உரிமை (RTI) மூலம் பெற்ற தகவலை ஆங்கில நாளிதழ் வெளியிட்டுள்ளது.

ஆண்டுக்குச் சராசரியாகச் சமஸ்கிருதத்திற்கு ₹230.24 கோடி வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் மற்ற ஐந்து செம்மொழிகளுக்குச் சராசரி ஆண்டு நிதி ₹13.41 கோடி மட்டுமே ஒன்றிய பாஜக அரசு ஒதுக்கி தனது வெறுப்புணர்வை வெளிப்படுத்தியுள்ளது. இ‌‌ந்த பாரபட்சமான போக்கை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

ADVERTISEMENT

2004ல் முதன் முதலாகச் செம்மொழி அங்கீகாரம் பெற்ற தமிழுக்கு, மொத்தம் ₹113.48 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. – இது சமஸ்கிருதம் பெற்ற தொகையை விட 22 மடங்கு குறைவு.

இந்தியாவின் மக்கட்தொகையில் 22% மக்கள் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஒரியா மொழி பேசுகிறார்கள். ஆனால் சமஸ்கிருதம் பேசுபவர்கள் மிகவும் சொற்பமானவர்களே.

சமீபத்தில் மதுரையில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்தியாவின் தலைசிறந்த மொழி தமிழ் என்று பேசியது வெறும் பசப்பு வார்த்தைகள் மட்டுமே என்பதை இந்த புள்ளிவிவரங்கள் வெளிப்படுத்துகின்றன.

தமிழ் மற்றும் பிற செம்மொழிகளுக்கு மொழிகளுக்கான உரிய அங்கீகாரம், நிதி மற்றும் வளர்ச்சித் திட்டங்களை ஒன்றிய அரசு உடனடியாக வழங்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share