பெரியாரின் பிறந்தநாளையொட்டி இன்று (செப்டம்பர் 17) தமிழக முதல்வர் ஸ்டாலின் சென்னையில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தமிழகத்தில் பெரியார் பிறந்த நாள் ஆண்டுதோறும் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும், அவரது பிறந்த நாள் சமூகநீதி நாளாகக் கடந்த ஆண்டு முதல் கடைபிடிக்கப்பட்டு, அனைத்து அரசு அலுவலகங்களிலும் உறுதிமொழியும் எடுக்கப்பட்டு வருகிறது.
முதல்வர் ஸ்டாலின் மரியாதை!
தமிழ்நாடு அரசின் சார்பில் பெரியாரின் 144வது பிறந்த நாளை முன்னிட்டு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 9 மணிக்கு அண்ணா சாலையில் சிம்சன் அருகில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து, அருகில் அலங்கரித்து வைக்கப்பட உள்ள உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
அவருடன் திமுக அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன், எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, , ஆ.ராசா, தயாநிதிமாறன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
மேலும் காங்கிரஸ் மூத்த தலைவரான குமரி ஆனந்தன், முதல்வர் ஸ்டாலினுடன் சேர்ந்து பெரியார் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
பெரியார் நினைவிடத்தில் கி.வீரமணி

அதேபோல், சென்னை பெரியார் திடலில் உள்ள அவரது நினைவிடத்தில் திராவிட கழகத்தின் தலைவர் கி.வீரமணி தனது ஆதரவாளர்களுடன் மரியாதை செலுத்தினார்.

விழுப்புரம் தைலாபுரம் தோட்டத்தில் உள்ள பெரியார் சிலைக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
கிறிஸ்டோபர் ஜெமா
மிட்டாய் வாங்க வந்த பள்ளி குழந்தைகளிடம் சாதிய பாகுபாடு!
சிசிடிவி கேமரா: காவல் நிலையங்களைக் கண்காணிக்கும் நெற்றிக்கண்!
