100 புதிய பேருந்து சேவைகள்: ஸ்டாலின் துவக்கி வைத்தார்!

Published On:

| By Selvam

Mk stalin inaugurates 100 bsvi bus

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் 100 புதிய BSVI பேருந்துகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜனவரி 20) கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் இன்றியமையாத போக்குவரத்துச் சேவைகளை தமிழ்நாடு போக்குவரத்துக் கழகங்களின் வாயிலாக குறைந்த கட்டணத்தில் அரசு வழங்கி வருகிறது.

கடந்த 2023-24ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1,000 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும் என்றும், அடிச்சட்டம் (Chassis) நல்ல நிலையில் உள்ள 500 பழைய பேருந்துகள் புதுப்பிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

அந்த அறிவிப்புகளின்படி, பொதுமக்களின் போக்குவரத்து தேவைகளை பூர்த்தி செய்கின்ற வகையிலும், அரசுப் போக்குவரத்து கழகங்களில் புதிய பேருந்துகளை இயக்கிடும் வகையிலும், ரூ.634.99 கோடி மதிப்பீட்டில் புதிதாக 1,666 BSVI பேருந்துகளை கொள்முதல் செய்து இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதன் முதற்கட்டமாக விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 40 புதிய பேருநதுகள், கோயம்புத்தூர் 40,  கும்பகோணம் 10, திருநெல்வேலி 5, மதுரை 5 புதிய பேருந்துகள் என மொத்தம் 100 புதிய BSVI பேருந்துகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக முதல்வர் ஸ்டாலின் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். எஞ்சியுள்ள பேருந்துகள் அடுத்த இரண்டு மாதங்களில் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட உள்ளது.

இந்த நிகழ்ச்சியில், போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஸ்ரீரங்கத்தில் சாமி தரிசனம் செய்தார் பிரதமர் மோடி

அந்த சிஎஸ்கே வீரர் பந்தயத்திலேயே இல்லை… முன்னாள் வீரர் ஓபன் டாக்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share