சென்னை அணியின் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழும் இளம்வீரர், டி2௦ உலகக்கோப்பை பந்தயத்திலேயே இல்லை என முன்னாள் வீரர் ஓபனாக பேசி இருக்கிறார்.
கடந்த உலகக்கோப்பை தோல்வியைத் தொடர்ந்து, வீரர்களை தேர்வு செய்வதில் இந்திய தேர்வுக்குழுவினர் மிகவும் கவனம் செலுத்தி வருகின்றனர்.
அடுத்ததாக ஐபிஎல் தொடர் நடைபெற இருக்கிறது. இதனையடுத்து உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் டி2௦ உலகக்கோப்பை தொடர் ஜூன் மாதம் நடைபெற இருக்கிறது.
இதில் எப்படியும் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது. இதற்கு நடுவே மூத்த வீரர்கள், இளம் வீரர்கள் என அதிரடி கலந்த கலவையாக இந்திய அணி மாறியுள்ளது.
முன்பு போல ஒரு சிலரை மட்டுமே நம்பி இருக்க வேண்டிய தேவை தற்போதைய இந்திய அணிக்கு இல்லை.
மாறாக யாரை தேர்வு செய்வது? என தேர்வுக்குழுவினரே குழம்பித் தவிக்கும் அளவுக்கு ஒவ்வொரு வீரருமே நல்ல பார்மில் இருக்கின்றனர்.
இந்த நிலையில் சென்னை அணியின் அடுத்த கேப்டனாக பார்க்கப்படும் இளம்வீரர் ருத்துராஜ் கெய்க்வாட் டி2௦ அணிக்கான பந்தயத்திலேயே இல்லை என, முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர்,”தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்தின் போது காயம் அடைந்ததால் ருத்துராஜ் அனைத்து போட்டிகளிலும் விளையாடவில்லை. இதனால் அவரின் திறமை முழுமையாக பயன்படுத்தப்படவில்லை என சொல்ல முடியாது.
அவரின் ஆட்டமும் அந்த அளவிற்கு சிறப்பாக இல்லை. உண்மையை சொன்னால் டி2௦ உலகக்கோப்பை பந்தயத்தில் அவர் இல்லை என்பதே உண்மை. டி2௦ போட்டியாக இருந்தாலும், டெஸ்ட் போட்டியாக இருந்தாலும் அதுதான் நிலைமை,” என தெரிவித்துள்ளார்.
ஒருவேளை ஆகாஷ் சோப்ராவின் கருத்து உண்மையாக மாறும் பட்சத்தில் மீண்டும் அணியில் இடம்பிடிக்க ருத்துராஜ் தன்னை நிரூபிக்க கடுமையாக போராட வேண்டியிருக்கும் என்பதே உண்மை.
எனினும் ஐபிஎல் போட்டிகளில் ருத்துராஜ் தன்னை நிரூபித்து அணியில் மீண்டும் இடம் பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
–மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோடி இராமநாதபுரம் வருகை: விடுதலையான தமிழக மீனவர்கள்!
மீண்டும் 47 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை!