மூன்று நாள் பயணமாக தமிழகத்திற்கு வந்துள்ள பிரதமர் மோடி இன்று (ஜனவரி 20) ஸ்ரீரங்கம் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
தமிழ்நாட்டிற்கு வந்துள்ள பிரதமர் மோடி நேற்று சென்னையில் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் மற்றும் புதுப்பிக்கப்பட்ட டிடி தமிழ் தொலைக்காட்சியைத் தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து நேற்று இரவு ஆளுநர் மாளிகையில் தங்கி ஓய்வெடுத்த பிரதமர் இன்று காலை தனி விமானம் மூலம் திருச்சி புறப்பட்டார். தொடர்ந்து காலை 10.30 மணியளவில் திருச்சி விமான நிலையத்தை அடைந்த பிரதமரை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் வரவேற்றனர். பின்னர் திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் அருகே அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேட் தளத்தை அடைந்தார். அங்கு பிரதமரை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிடோர் வரவேற்றனர்.
தொடர்ந்து சாலை மார்க்கமாக ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு வந்தடைந்த பிரதமருக்கு பாஜகவினர் மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். கோவிலில் பிரதமருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து ஸ்ரீரங்கம் ரங்கநாதரை பிரதமர் மோடி தரிசனம் செய்தார். பின்னர் ரங்கநாதசுவாமி கோவிலில் உள்ள ஆண்டாள் யானையிடன் பிரதமர் மோடி ஆசீர்வாதம் பெற்றார்.
இதனையடுத்து ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவிலுக்கு சென்று பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்ய உள்ளார். பிரதமர் வருகையை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் சுமார் 3,700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
மீண்டும் 47 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை!