பிரச்சாரம் ஆரம்பம்… ஸ்டாலின் உற்சாகம்!

Published On:

| By Selvam

திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் நேற்று (மார்ச் 22) முதல் தனது பொதுக்கூட்ட ஸ்டைல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார்.

இன்று (மார்ச் 23) தஞ்சை, நாகை தொகுதி திமுக கூட்டணி வேட்பாளர்களுக்காக கொரடாச்சேரி பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார்.

அதிக அலைச்சல் வைத்துக் கொள்ள வேண்டாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியதால்… திறந்த வேனில் ஊர் ஊராக செல்லும் பிரச்சார உத்தியை உதயநிதியிடம் கொடுத்துவிட்டு, இரண்டு தொகுதிகளுக்கு ஒரு பொதுக்கூட்டம் என்ற அளவில் ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

அந்தந்த பகுதிகளில் காலையில் வாக்கிங் செல்லும்போது நேரடியாகவும் மக்களை சந்தித்து வாக்குகள் சேகரிக்கிறார்.

முதல் பிரச்சாரக் கூட்டம் திருச்சி இரண்டாவது பிரச்சாரக் கூட்டம் தஞ்சை அருகே உள்ள கொரடாச்சேரி என்று இரண்டு கூட்டங்களிலும் கலந்துகொண்ட ஸ்டாலின் மிக உற்சாகமாகவே இருக்கிறார்.

கூட்டம் முடிந்ததும் இரவு சில மணி நேரங்கள் வரை கண்விழித்து அந்தந்த தொகுதியின் தற்போதைய நிலவரம் பற்றியும் ஆலோசனை நடத்துகிறார் ஸ்டாலின். காலை வாக்கிங் போகும்போதும் மக்களை சந்தித்து அதிகாலையிலேயே தேர்தல் பரப்புரையில் ஈடுபடுகிறார்.

இந்த முதல் இரண்டு பிரச்சாரக் கூட்டங்களும், மக்களின் வரவேற்பும் அவருக்கு புதிய உற்சாகத்தை கொடுத்திருக்கின்றன என்கிறார்கள் திமுக நிர்வாகிகள்.

-வேந்தன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிஎம்எல்ஏ சட்டத்தை தவறாக பயன்படுத்தினால்….: உச்ச நீதிமன்ற நீதிபதி எச்சரிக்கை!

“பாஜகவுடன் கூட்டணி வைத்தால் உடனடியாக சின்னம்”: சீமான்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share