பண மோசடி தடுப்பு சட்டத்தை தவறாக பயன்படுத்தினால் அது தேசத்தைத் தான் பாதிக்கும் என்று உச்சநீதிமன்ற நீதிபதி உஜ்ஜல் புயான் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் செந்தில் பாலாஜி தொடங்கி தலைநகர டெல்லி முதல்வர் வரை அமலாக்கத்துறை பலரை கைது செய்து விசாரித்து வருகிறது.
அமலாக்கத்துறை, வருமானவரித்துறை உள்ளிட்ட விசாரணை அமைப்புகள் மூலம் மிரட்டி பாஜக தேர்தல் பத்திர திட்டத்தின் மூலம் அதிக அளவு நிதி பெற்றிருக்கிறது என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன.
இந்த சூழலில் உச்ச நீதிமன்ற நீதிபதி உஜ்ஜல் புயான் இப்படி ஒரு முக்கிய கருத்தை தெரிவித்திருக்கிறார்.
வழக்கறிஞர் அகிலேஷ் துபேயின், “Treatise on PMLA -Law and Practice” என்ற புத்தக வெளியீட்டு விழாவில் நீதிபதி உஜ்ஜல் புயான், பண மோசடி தடுப்புச் சட்டம் அமலாக்கத்துறை அதிகாரிகளால் தவறாக பயன்படுத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி பேசினார்.
“குற்றம் – கறை படிந்த பணத்திற்கு எதிரான போராட்டத்தில் பிஎம்எல்ஏ சட்டம் சக்தி வாய்ந்த ஆயுதம் ஆகும். பண மோசடி என்ற அச்சுறுத்தலை எதிர்த்து போராடுவது மிகவும் அவசியம்.
ஆனால் இந்த ஆயுதத்தை தவறாக பயன்படுத்தினால் அது அதன் திறனை இழந்து விடும் என்பதை நாம் அனைவரும் அறிவோம். இந்த சட்டத்தை தவறாக பயன்படுத்தினால் அமலாக்கத்துறை நடவடிக்கைகள் பற்றி எதிர்மறை கேள்விகள் எழும். அப்படி தவறாக பயன்படுத்தும் போது பாதிக்கப்படுவது இந்த சமூகமும் தேசமும்தான்” என்று கூறினார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
WhatsApp: வரப்போகும் சூப்பர் அப்டேட் … ரொம்ப நல்ல விஷயம்!
“மோடி அடிக்கடி தமிழ்நாட்டுக்கு வரணும்” : திரூவாரூரில் ஸ்டாலின் பிரச்சாரம்!
யாரப்பா அது? அவரு மேல பாலியல் அது இதுனு நம்மாளுங்ககிட்ட புகார் வாங்கி ஒரு வழக்கு போடுங்க
பயன்படுத்தப்பட்டிருப்பது எல்லாம் அரசியல் வியாதிகள் மேல்தான் என்பதை மக்கள் அறிவார்கள்