ககன்யான் சோதனை ஓட்டம் தாமதம்!

Published On:

| By christopher

விண்ணுக்கு மனிதர்களை அனுப்பும் சுகன்யான் திட்டத்தின் ஒரு பகுதியான ககன்யான் மாதிரி சோதனை ஓட்டம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று(அக்டோபர் 21) காலை 8 மணிக்கு பதிலாக 8.30 மணிக்கு விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது.

சந்திரயான் 3, ஆதித்யா எல்1 திட்டத்தை தொடர்ந்து விண்ணுக்கு மனிதனை அனுப்பும் திட்டத்தில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ தீவிரமாக இறங்கியுள்ளது.

ADVERTISEMENT

இதுவரை ரஷ்யா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகள் மட்டுமே செயல்படுத்தியுள்ள இந்த திட்டத்தில் தற்போது இந்தியாவும் களம் கண்டுள்ளது.

அதன்படி ககன்யான் என்ற அழைக்கப்படும் இந்த திட்டத்தின்கீழ் விண்கலம் மூலம் 3 வீரர்களை தரையில் இருந்து 400 கி.மீட்டர் தூரம் சுற்றுவட்டப் பாதைக்கு அனுப்பி அவர்களை மீண்டும் பூமிக்கு பத்திரமாக திரும்ப அழைத்துவர இஸ்ரோ முடிவு செய்துள்ளது.

ADVERTISEMENT

இத்திட்டத்தை 2025-ம் ஆண்டில் செயல்படுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ள நிலையில்,  அதற்குமுன் 3 கட்ட பரிசோதனை முயற்சிகளை மேற்கொள்ள உள்ளது.

அதன்படி முதல்கட்ட சோதனை ஓட்டம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள முதலாவது ஏவுளத்தில் இருந்து இன்று காலை 8 மணிக்கு நடத்தப்படும் என்று முன்னர் இஸ்ரோ அறிவித்திருந்தது.

ADVERTISEMENT

இந்த நிலையில் 8 மணிக்கு பதிலாக 8.30 மணிக்கு சோதனை ஓட்டம் நடைபெறும் என்று இஸ்ரோ தற்போது அறிவித்துள்ளது.

இந்த முதற்கட்ட சோதனையில், டிவி-டி1 எனும் ஒரு பூஸ்டர் கொண்ட ராக்கெட் மூலம் தரையில் இருந்து 17 கிலோமீட்டர் தொலைவுக்கு கொண்டு செல்லப்படும் மனிதர்கள் மீண்டும் பாராசூட் மூலம் பூமிக்கு திரும்பி வங்க கடலில் இறக்கப்படுவார்கள்.

அவர்கள் கடலில் இறங்கிய கேப்சூலை இந்திய கடற்படையின் சிறப்பு கப்பல் மற்றும் நீச்சல் குழுவினா் பத்திரமாக மீட்டு இஸ்ரோவிடம் ஒப்படைக்க உள்ளார்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

ICC Worldcup: டேவிட் வார்னர் அபாரம்.. தொடர் தோல்வியில் பாகிஸ்தான்!

பிக் பாஸ் சீசன் – 7; கேப்டனை மதிக்காத ஸ்மால் பாஸ் ஹவுஸ்மேட்ஸ்!

Photo of author
christopher
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share