மின்னம்பலம் மெகா சர்வே: தேனி… யார் திசையில் வெற்றிக் காற்று?

Published On:

| By Kavi

2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்? என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது.

இந்த தேர்தலில் தேனி தொகுதியில் திமுக சார்பில் தங்கதமிழ்செல்வன் களமிறங்கியுள்ளார்.

அதிமுக சார்பில் நாராயணசாமி போட்டியிடுகிறார்.

பாஜக கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் போட்டியிடுகிறார்.

நாம் தமிழர் கட்சியின் சார்பில் மதன் ஜெயபாலன் போட்டியிடுகிறார்.

திமுக, அதிமுக, அமமுக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில்

களத்தின் நிலவரம் என்ன? மக்களின் வாக்குகள் யாருக்கு என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்

உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக தேனி பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம்.

இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்

18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது

தேனி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  ஆண்டிப்பட்டி, பெரியகுளம் (தனி),  போடி,  கம்பம்,  உசிலம்பட்டி மற்றும் சோழவந்தான் (தனி) பகுதிகளில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்… 

திமுக வேட்பாளர் தங்கதமிழ்செல்வன் 39% வாக்குகளைப் பெற்று தேனி தொகுதியில் முன்னிலையில் நிற்கிறார்.

அமமுக வேட்பாளர் டிடிவி தினகரன் 34% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும்

அதிமுக வேட்பாளர் நாராயணசாமி 22% வாக்குகளைப் பெறுவார் என்றும்

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மதன் ஜெயபாலன் 4% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் கூறுகின்றன.

1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.

ஆக…,தேனி தொகுதியில் இந்த முறை தங்கதமிழ்செல்வன் வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவே பிரகாசமான வாய்ப்புள்ளது.

மின்னம்பலம் கருத்துக்கணிப்பின் முடிவுகளை தெரிந்துகொள்ள தொடர்ந்து இணைந்திருங்கள்  minnambalam.com வலைதளத்தில்

தேனி யார் திசையில் வெற்றிக் காற்று! | Minnambalam Mega Survey 2024 | Theni | Elections 2024

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மின்னம்பலம் மெகா சர்வே: தர்மபுரி… தட்டிப் பறிப்பது யார்?

மின்னம்பலம் மெகா சர்வே: நீலகிரி… சிகரம் தொடுவது யார்?

மின்னம்பலம் மெகா சர்வே: சிதம்பரம்… மக்கள் மனதின் ரகசியம் என்ன?

மின்னம்பலம் மெகா சர்வே: திருநெல்வேலி… மக்கள் தீர்ப்பு என்ன?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share