முதல்வர் விஜய் (Vijay) தலைமையிலான தவெக ஆட்சியை கவிழ்க்க தவெக எம்.எல்.ஏ.க்களை வளைக்க முயற்சித்ததாக திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்கை போலீசார் வலைவீசி தேடுவதாக நமது மின்னம்பலத்தில்தான் முதன் முதலில் செய்தி வெளியானது.
அதில், “நம்பிக்கை வாக்கெடுப்புக்கு இணையா விஜய் அரசுக்கு நெருக்கடி தர்ற மாதிரி சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர முடியும்.. அந்த தீர்மானத்தை நிறைவேற்றிவிட்டால் அதை வைச்சு தவெக ஆட்சியை கவிழ்க்க முடியும்னு ஒரு ஸ்கெட்ச் போட்டாங்க.. தவெகவில பலவீனமாக இருக்கிற 4 எம்.எல்.ஏ.க்களையும் வளைச்சுட்டாங்க.. அதுல 2 எம்.எல்.ஏ.க்களுக்கு “அட்வான்ஸ்” கூட சேர்ந்துருச்சுன்னு தகவல் இருக்கு..
இப்படி சபாநாயகரை முன்வைச்சு விஜய் ஆட்சிக்கு எதிராக நடக்குற அத்தனை மூவ்மெண்ட்ஸும் உளவுத்துறை ஐஜி அஸ்ரா கார்க்-க்கு போக அவரும் ஒரு டீம் பார்ம் பண்ணி, கண்காணிக்க வேண்டியவங்களை கண்காணிச்சு சிஎம் விஜய்க்கு டீட்டெய்லா ரிப்போர்ட் அனுப்பிட்டாரு..
இந்த ரிப்போர்ட்டைப் பார்த்து ஷாக் ஆன சிஎம் விஜய்.. இதை ஆப் செய்யனுமேன்னுதான் ஆக்ஷனுக்கு ஓகே சொன்னாரு.. கரூர் போலீசும் செந்தில் பாலாஜி தம்பி அசோக்குமாரை வலை வீசி தேட தொடங்கிச்சுங்க”ன்னு நாம விரிவாக எழுதி இருந்தோம்.
இந்த விவகாரத்தில்தான் தற்போது போலீசார் 3 பேரை கைது செய்துள்ளனர். மேலும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது தம்பி அசோக்குமாருக்கு இந்த ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் தொடர்பு இருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
