புதிய பொறுப்புகள் வேண்டாம் : வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோர் ஈபிஎஸுக்கு கடிதம்!

Published On:

| By Kavi

புதிய பொறுப்புகள் எங்களுக்கு வேண்டாம் என அதிமுக முக்கிய நிர்வாகிகள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதியிருக்கின்றனர்.

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சிவி சண்முகம், வேலுமணி தலைமையில் 25 எம்.எல்.ஏ.க்கள் தவெக ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்தனர்.

ADVERTISEMENT

இந்தநிலையில் தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்தவர்களின் கட்சி பொறுப்புகளை எடப்பாடி பழனிசாமி பறித்தார்.

தொடர்ந்து சி.வி.சண்முகம் நீங்கலாக மற்றவர்களுக்கு கட்சிப் பதவிகள் வழங்கப்பட்டன

ADVERTISEMENT

நத்தம் விஸ்வநாதன், வேலுமணி ஆகியோரை துணை பொதுச்செயலாளர்களாக நியமித்தார் ஈபிஎஸ்.

தங்கமணி, கே.சி கருப்பணன், கே.பி.அன்பழகன், காமராஜ், கே.சி.வீரமணி ஆகியோர் அமைப்புச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டனர்.

ADVERTISEMENT

கொள்கை பரப்பு இணைச் செயலாளராக எம்.ஆர்.விஜயபாஸ்கர் நியமிக்கப்பட்டார். ஆனால் அவர் அதிமுகவில் இருந்து விலகிவிட்டார்.

இந்தசூழலில் புதிய பொறுப்புகளை ஏற்கப்போவது இல்லை. எங்களுக்கு புதிய கட்சிப் பதவிகள் வேண்டாம் என்று கூறி எஸ்பி வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், கே.பி.அன்பழகன், அருண்மொழித்தேவன், பாலகிருஷ்ண ரெட்டி, எஸ் எம் சுகுமார், வீரமணி என 7 எம்.எல்.ஏ.க்களும் கிருஷ்ணமுரளி, தங்கமணி ஆகிய 2 முன்னாள் எம்.எல்.ஏ.க்களும் ஈபிஎஸ்க்கு கடிதம் எழுதியுள்ளனர். 

 சிவி சண்முகத்தை ஒதுக்கி வைத்ததை ஏற்க முடியாது என்று இவர்கள் கடிதத்தில் அதிருப்தி தெரிவித்திருப்பதாக தகவல்கள் வருகின்றன.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share