வைஃபை ஆன் செய்தது, “நா ரெடி தான் வரவா? அண்ணா இறங்கி வரவா”ன்னு ஹம்மிங் செய்தபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.
என்னங்க ப்ரோ.. செம்ம வைப் மோடு போல..
நமக்கு கிடைச்சிருக்கும் நியூஸும் ’அப்படி போடு! அப்படி போடு’ ரகம்தான்.. சிஎம் அட்வைசர் ஜான் ஆரோக்கியசாமி (John Arokiasamy) பத்திதான்..
சிஎம் விஜய்யின் தவெக தோழமை கட்சிகளோட ஆலோசனை கூட்டத்துக்கு விசிக, மதிமுக, சிபிஐ, சிபிஎம், முஸ்லிம் லீக், காங்கிரஸுன்னு எல்லா கட்சிகளையும் அழைச்சாங்க இல்லையா?

விசிக திருமாவளவனை சந்திக்கும் போது புஸ்ஸி ஆனந்தும் ஆதவ் அர்ஜூனாவும்தான் போனாங்க.. ஆனா அதுக்கு அப்புறமா இந்த டீமில் ஜான் ஆரோக்கியசாமியும் இணைஞ்சார்.. வைகோவுக்கு சால்வை போட்டார்.. தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாக்கூருக்கு ஜான்தான் இன்விடேஷனையே கொடுத்தார்.. அவருக்கு பக்கத்துல புஸ்ஸி, ஆதவ் கூட நின்னுகிட்டு இருந்தாங்க..
இது என்னய்யா ஜான் ஆரோக்கியசாமி ஓபனா வெளியே வந்திருக்காருன்னு விசாரிச்சப்பதான் இந்த புதிருக்கே விடை கிடைச்சுச்சு..

சிஎம் விஜய்க்கு நெருக்கமானவங்க கிட்ட்ட நாம பேசும்போது, “ஜான் ஆரோக்கியசாமி திருவள்ளூர் பக்கத்துல இருக்கிற குக்கிராமத்தைச் சேர்ந்தவர்.. திருச்சியில பாதிரியார் படிப்பு படிக்க போனாரு.. ஆனால் பாதியிலேயே வந்து லயோலா காலேஜில் எம்.ஏ. லிட்டரேச்சர் படிச்சாரு.. அதை முடிச்ச பிறகு சென்னையில, ஜெர்மன் நிறுவனமான Good Relations-ல் வேலைக்கு சேர்ந்தாரு.. அது Crisis Management- கிரைசிஸ் மேனேஜ்மெண்ட் நிறுவனம்.. பிரச்சனைகளை சால்வ் செய்கிற நிறுவனம்..
அங்க இருக்கும் போதுதான் அரசியல் பக்கம் அவருக்கு இன்ட்ரஸ்ட் வருது.. தொடக்கத்துல ஆந்திராவில சந்திரபாபு நாயுடுவுக்கான தேர்தல் வியூக வகுப்பு டீமில் இணையறார்.. அப்புறமா மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜிக்கு ஒர்க் செஞ்சார்.. மகாராஷ்டிராவில காங்கிரஸ் கட்சிக்கு எலக்ஷன் ஒர்க் செய்து கொடுத்தார்..

2016-ல் அன்புமணி ராமதாஸை முதல்வர் வேட்பாளராக நிறுத்தி, “மாற்றம் முன்னேற்றம் அன்புமணி”ன்னு ஸ்டைலிஷா பிரசாரம் செஞ்சது பாமக.. அதுக்கான மூளை ஜான் ஆரோக்கியசாமிதான்..

கோவை மண்டலத்துல அதிமுக இன்சார்ஜா இருந்த எஸ்பி வேலுமணி டீமுக்கும் அட்வைசரா இருந்தார் ஜான்.

2024-ல் லோக்சபா எலக்ஷனப்ப பாஜகவுக்கு ஒர்க் பண்ண டிரை செஞ்சார் ஜான்.. அவரோட பயோ டேட்டா எல்லாத்தையும் பார்த்த பாஜக தேசிய பொதுச்செயலாளர் பிஎல் சந்தோஷ், “பேரே சரியில்லை.. எப்படி நமக்கு சரியா வருவாரு”ன்னு சொல்லி..அதாவது கிறிஸ்தவர் என்பதால ரிஜெக்ட் செஞ்சிட்டாரு..
இதுக்கு அப்புறமா, தவெக கட்சி ஆரம்பிக்கிறதுக்கு ஒரு வருஷத்துக்கு முன்னாடி, பிரசாந்த் கிஷோர்- சுனில் எல்லாரும் விஜய்யை போய் பார்த்து பேசுனாங்க.. அந்த வரிசையில ஜான் ஆரோக்கியசாமியும் விஜய்யை சந்திச்சாரு.. அப்ப கூட இருந்தது புஸ்ஸி ஆனந்த் மட்டும்தான்..

பிரசாந்த் கிஷோர், சுனில் எல்லாம், ‘டேட்டா’ டெக்னிக்கலா விஜய்கிட்ட பேசுனாங்க.. ஜான் இந்த டேட்டா டெக்னிக்கலுடன் வேற ஒரு அஸ்திரத்தை கையில எடுத்தாரு.. அவரு சொன்னது 3 J மந்திரம்.. ”ஜீசஸ் என் கனவில வந்து உங்களுக்கு ஒர்க் பண்ண சொல்றாரு.. J- ஜீசஸ்.. நான் Johon ஆரோக்கியசாமி.. நீங்க Joseph விஜய்.. இந்த மூணு J நிச்சயம் ஜெயிக்கும் அப்படிங்கிறது ஜீசஸ் கட்டளை”ன்னு பிரசங்கத்தையும் சேர்த்துகிட்டாரு…
இதை எல்லாத்தையும் கவனமாக கேட்டுகிட்ட விஜய் அந்த சந்திப்புல எதுவும் சொல்லாம அனுப்பி வெச்சுட்டாரு..
ஆனா அடுத்த நாள் காலையில, ஜான் ஆரோக்கியசாமியை புஸ்ஸி ஆனந்த் கூப்பிட்டுவிட்டாரு.. சரின்னு ஜானும் போனாரு.. அங்கே போனா கூடுதல் விவரங்கள் எல்லாம் எதுவும் கேட்காமல், விஜய்க்காக ஒர்க் பண்ற அக்ரிமெண்ட்டுல சைன் பண்ண சொல்லிட்டாங்க.. பேமெண்ட் ரூ10 கோடி.. ஜான் ஆரோக்கியசாமியும் சைன் பண்ண அங்கிருந்துதான் அவரோட புது அத்தியாயமே தொடங்குச்சு..
அதுக்கு அப்புறமா விஜய்கூட ஆதவ் அர்ஜூனா, அருண்ராஜ்னு எல்லாரும் சேர்ந்தாலும் ஜான் ஆரோக்கியசாமியின் இடம் தனிச்சே இருந்துச்சு..
ஒவ்வொரு பிரச்சனையிலும் ‘கூட்டத்தோடு’ கூட்டமா விஜய்யை இம்பிரஷ் செய்ய கூடிய கருத்தை சொல்லாம, ”இது ஒர்க் அவுட் ஆகும்.. ஒர்க் அவுட் ஆகாது”ன்னு கட் அண்ட் ரைட்டாக விஜய்க்கு இப்ப வரைக்கும் அட்வைஸ் செஞ்சுகிட்டு இருக்கிறார் ஜான்..



அசெம்பிளி எலக்ஷனுன்னு முன்னாடியே அதிமுக கூட அருண்ராஜ் போன்றவங்க கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துனாங்க.. ‘கூட்டணி’ இல்லாம எப்படி எலக்ஷனை சந்திக்கிறது? அப்படி ‘கூட்டணி’ இல்லாம போனா நாம ஜெயிக்க முடியாது..ன்னு நினைச்சவர் ஆதவ்.. புஸ்ஸி ஆனந்தும் கூட்டணி இல்லைன்னா ‘எதிர்க்கட்சிதான்’ ஆக முடியும்னு ஸ்டிராங்கா நம்புனார்.. அவங்க எல்லாம் ‘கூட்டணி’ இல்லாம ஆட்சி அமைக்க முடியாதுங்கிறதுல உறுதியா இருந்தாங்க..
எலக்ஷன் நெருங்க நெருங்க கடைசி நேரத்துல ராமதாஸ் பாமக, சசிகலா, டிடிவி தினகரனின் அமமுக, புதிய தமிழகம் டாக்டர் கிருஷ்ணசாமி, ஓபிஎஸ் மகன் ரவீந்தரநாத்துன்னு பல்வேறு தரப்பும் விஜய் தலைமையிலான கூட்டணிக்கு முயற்சி செஞ்சாங்க.. ஆனா ஜான் ஆரோக்கியசாமிதான், “பொறுங்க சொல்லி அனுப்புகிறோம்”னு வெயிட் பண்ண வெச்சுட்டாரு.. யாரையும் அவசரப்பட்டு சேர்க்க வேண்டாம்னு விஜய்கிட்டேயும் சொல்லிட்டாரு..
இந்த சர்க்கிளிலேயே ஜான் ஆரோக்கியசாமி மட்டும்தான் விஜய்கிட்ட, தொடக்கத்தில் இருந்தே, “இல்லை.. கூட்டணியே வேண்டாம்.. எந்த கட்சியோடவும் கூட்டணி வைக்க வேண்டாம்.. அது தேவையில்லாத சிக்கலைதான் உருவாக்கும்.. உங்களுக்கு தனி மாஸ் இருக்கு.. இமேஜ் இருக்கு.. ஒவ்வொரு வீட்டுக்குள்ளேயும் உங்களுக்கு செல்வாக்கு இருக்கு.. நாம தனிச்சு நின்றால் நிச்சயம் ஆட்சியை பிடிக்க முடியும்… தனிச்சே நிற்போம்”னு கறாரா சொன்னார்…

கரூர் பிரச்சனை அப்பவும், எல்லாருமே ”கரூருக்கு போய் பாதிக்கப்பட்டவங்களை பாருங்க”ன்னு விஜய்க்கு நெருக்கடி கொடுத்தாங்க.. ஆனா ஜான் ஆரோக்கியசாமிதான், “அதெல்லாம் கரூருக்கு போக வேண்டாம்.. அவங்களை எல்லாம் பனையூருக்கு வரவைச்சு ஆறுதல் சொல்லலாம்”னு சொன்னார். அந்த டைம்ல, பல விமர்சனங்கள் வந்தாலும் கூட ஜான் சொன்னதை அப்படியே விஜய் ஏத்துகிட்டார்..

இப்ப கூட அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 25 பேர், நம்பிக்கை வாக்கெடுப்பில் விஜய்க்கு ஆதரவா ஓட்டுப் போட்டாங்க.. ஆனாலும் கூட அவங்களை கூட்டணி கட்சியாக அங்கீகரிச்சு அமைச்சர் பதவி தர வேண்டாம்னு சொன்னதும் ஜான்தான்..
அதிமுகவின் 25 எம்.எல்.ஏ.க்கள் டீம், ஆதவ் மாமியார் லீமா ரோஸ் மார்ட்டின் மூலமாதான் ஆதவ்- புஸ்ஸி ஆனந்த்- விஷ்ணு ரெட்டியுடன் பேச்சுவார்த்தை நடத்துனாங்க.. ஆனா ஜான் ஆரோக்கியசாமிதான், ”அதிமுக லீடர்ஸுக்கு அமைச்சர் பதவி கொடுக்க கூடாது.. அவங்க மேல வழக்குகள் இருக்கு.. நமக்கு தேவையில்லாத சிக்கல்கள் வரும்.. அவங்களை காரண்மா காட்டி அமலாக்கத்துறை, வருமானவரித்துறைன்னு நமக்கு நெருக்கடி கொடுப்பாங்க”னு கண்டிப்பாக சொல்லி தடுத்து நிறுத்தினார்..
இதனால எஸ்பி வேலுமணி தலைமையிலான அந்த டீமின் ஆபரேஷனே அப்ப பெயிலியர் ஆச்சு..
இப்ப அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அடுத்தடுத்து ராஜினாமா செஞ்சுட்டு தவெகவில இணையறாங்க.. அப்படி அவங்க தவெக வேட்பாளராக நின்னு ஜெயிச்சாலும் கூட அமைச்சரவையில சேர்க்கிறதை பத்தி பிறகு முடிவு செய்யலாம்.. எந்த கமிட்மெண்ட்டும் தர வேண்டாம்னு விஜய்கிட்ட சொல்லிகிட்டு இருக்கிறவரும் ஜான்தான்..
ஆனா, சோசியல் மீடியாவிலும் பொதுவெளியிலும், “யாருங்க இந்த ஜான்?” “ஜானுக்கு சிஎம் ஆபீசில் என்ன வேலை?” “ஜான் எப்படி உளவுத்துறை ரிப்போர்ட்ஸ் எல்லாம் படிக்கலாம்”னு கேள்விகள் கேட்டாங்க..

இப்ப திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி, டிஜிபிகிட்ட போய் ஜான் ஆரோக்கியசாமிக்கு எதிராக புகாரும் கொடுத்துருக்கிறாரு.. அதுல, “ஜான் ஆரோக்கியசாமி அரசாங்கத்தின் எந்த பதவியிலும் இல்லாதவரு.. அவரு எப்படி கேபினட் மீட்டிங்குல கலந்துக்கிறாரு? அவருக்கு எப்படி சிஎம் அறைக்கு பக்கத்தில ரூம் கொடுத்தாங்க? சிஎம் விஜய், ஜான் ஆரோக்கியசாமி மீது நடவடிக்கை எடுங்க.. இல்லைன்னா கோர்ட்டுக்கு போவோம்”னு சொல்லி இருக்கிறார்..
இன்னொரு பக்கம் பார்த்தீங்கன்னா, சிஎம் விஜய்-க்கு நெருக்கமான ஜோசியருக்கும் பதவி கொடுத்தாங்க.. அது சர்ச்சையானதால வாபஸ் வாங்கிட்டாங்க.. சிஎம் கூட இருக்கிற ரூட் ஜெகதீஷுக்கு பெர்சனல் செக்ரெட்டரி போஸ்ட் கொடுக்கப்பட்டிருக்கு.. ஜனநாயகன் பட தயாரிப்பாளர் வெங்கட நாராயணாவுக்கு டெல்லி சிறப்பு பிரதிநிதி போஸ்ட் கொடுத்திருக்காங்க.. இதுல ஜானுக்கு மட்டும்தான் இன்னும் போஸ்ட் போடலை
இதை எல்லாம் வெச்சுதான் சிஎம் விஜய் அதிரடியா ஒரு முடிவை எடுத்திருக்கிறாரு..
அதுதான், “திருச்சி கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் தவெக வேட்பாளராக ஜான் ஆரோக்கியசாமியை நிறுத்தி ஜெயிக்க வைக்கிறது”.. அப்படிங்கிற முடிவு.
ஜான் ஆரோக்கியசாமி ஜெயிக்க வெச்சு அமைச்சரவையில சேர்த்துக்கலாம்.. அவரு எப்பவும் போல சிஎம் விஜய்யின் அத்தனை பணிகளையும் பார்க்கலாம்.. அப்ப யாருமே ஜான் ஆரோக்கியசாமியை கேள்வியே கேட்க முடியாது இல்லையா? அதனாலதான சிஎம் விஜய், ஜான் ஆரோக்கியசாமியை திருச்சி கிழக்கு பை எலக்ஷன் கேண்டிடேட்டா நிறுத்த முடிவு செஞ்சிருக்காரு”ன்னு மூச்சு விடாம சொல்லி முடிச்சாங்க ப்ரோன்னு சொல்லியபடியே டைப் செய்துவிட்டு சென்ட் பட்டனை தட்டியபடி ஆஃப் லைன்னுக்குள் போனது வாட்ஸ் ஆப்.
