விஜய் ஆலோசகர்கள் ஜான் ஆரோக்கியசாமி, விஷ்ணு ரெட்டி மீது போலீசில் திமுக புகார்!

Published On:

| By Mathi

DMK Files Police Complaint Against CM Vijay’s Advisors John Arockiasamy and Vishnu Reddy

முதல்வர் விஜய்யின் ஆலோசகர்களாக செயல்பட்டு வரும் ஜான் ஆரோக்கியசாமி மற்றும் விஷ்ணு ரெட்டி ஆகியோருக்கு எதிராக தமிழ்நாடு காவல்துறை தலைவர் மகேஷ்குமார் அகர்வாலிடம் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி புகார் கொடுத்துள்ளார்.

இது தொடர்பாக ஆர்.எஸ். பாரதி கொடுத்துள்ள புகாரில், “ஜான் ஆரோக்கியசாமி, விஷ்ணு ரெட்டி ஆகிய இருவரும் அரசு அதிகாரிகளோ அல்லது சட்ட ரீதியாக பொறுப்பானவர்களோ அல்ல. இந்த இரு தனிநபர்களிடம் அரசின் நடவடிக்கைகளை மேற்கொள்ள முதல்வர் விஜய் ஒப்படைத்துள்ளார். தமிழ்நாட்டைச் சேராத இவர்கள் எந்த அடிப்படையில் அரசு சார்ந்த கூட்டங்களில் பங்கேற்கின்றனர்?

ADVERTISEMENT

முதல்வர் விஜய் தமது ரகசிய காப்புரிமை பிரமாணத்தை மீறும் செயல் இது. முதல்வர் விஜய்யின் அறைக்கு அருகேயே இவர்களுக்கும் அறை ஒதுக்கப்பட்டுள்ளது. இவர்கள் அரசு கூட்டங்களில் பங்கேற்பது கண்டனத்துக்குரியது. ஆகையால் முதல்வர் விஜய் , ஜான் ஆரோக்கியசாமி, விஷ்ணு ரெட்டி மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்; இந்த நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share