விஜய் அழைப்பு- சிபிஐ, சிபிஎம் நிராகரிப்பு?

Published On:

| By Mathi

CPI, CPM Reject Vijay’s Invitation for Alliance Talks

தமிழக முதல்வரும் தவெக தலைவருமான விஜய் நாளை ஜூலை 1-ந் தேதி ஏற்பாடு செய்துள்ள ‘தவெக தோழமை கட்சிகள்’ ஆலோசனை கூட்டத்தை இடதுசாரி கட்சிகளான சிபிஐ, சிபிஎம் ஆகியவை புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதல்வர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சிக்கு காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகள் ஆதரவு தெரிவிக்கின்றன. காங்கிரஸ், விசிக, முஸ்லிம் லீக் கட்சிகள் முதல்வர் விஜய் அமைச்சரவையிலும் இடம் பெற்றுள்ளன. சிபிஐ, சிபிஎம் கட்சிகள், தவெக ஆட்சிக்கு வெளியில் இருந்து ஆதரவு தெரிவிக்கின்றன.

ADVERTISEMENT

இந்நிலையில் தவெகவின் தோழமை கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் நாளை கோவளத்தில் நடைபெற உள்ளது. முதல்வர் விஜய் தலைமையில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில் பங்கேற்க விசிக, மதிமுக, முஸ்லிம் லீக், சிபிஐ, சிபிஎம், காங்கிரஸ் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளன. அமைச்சர்கள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா ஆகியோர் இந்த கட்சிகளின் தலைவர்களை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்துள்ளனர்.

ADVERTISEMENT

இந்த நிலையில் முதல்வர் விஜய் நடத்தும் ‘தோழமை கட்சிகளின்’ ஆலோசனைக் கூட்டத்தை இடதுசாரிகள் புறக்கணிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேநேரத்தில் மக்கள் பிரச்சனைகள் தொடர்பான சில கோரிக்கைகளுக்காக முதல்வர் விஜய்யை இந்த ஆலோசனை கூட்டத்துக்கு முன்னதாக இடதுசாரி கட்சிகளான சிபிஐ, சிபிஎம்-ன் தலைவர்கள் சந்திக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ADVERTISEMENT
Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share