விஜய் அரசு மீது விசிக பரபர ஊழல் புகார்!

Published On:

| By Mathi

VCK Levels Corruption Allegations Against CM Vijay-led TVK Govt

முதல்வர் விஜய் (CM Vijay) தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சியில் ஊழல் நடைபெறுவதாக ஆட்சிக்கு ஆதரவு தருகிற திருமாவளவனின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) பகிரங்கமாக குற்றம் சாட்டி உள்ளது.

விசிகவின் பொருளாளர் எஸ்.எஸ். பாலாஜி தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: தவெக-வின் “ஊழலற்ற ஆட்சி” என்ற வாக்குறுதியானது, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் (TNPCB) சமீபத்தில் வெளியிடப்பட்ட மற்றும் எதிர்பார்க்கப்படும் பணியிட மாறுதல் பட்டியலில் நிலவும் அதிகார துஷ்பிரயோகம் குறித்த கடுமையான புகார்களால் கேள்விக்குள்ளாகியுள்ளது.

ADVERTISEMENT

TNPCB-யின் ஓய்வுபெற்ற உறுப்பினர் செயலர் ”விஜயபாஸ்கர்” (என்னே பெயர் ஒற்றுமை!) என்பவர்தான், தற்போதைய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ராஜீவின் மாமனார் ஆவார். இவர்தான் இந்த முறைகேட்டின் பின்னணியில் இருப்பதாகக் குற்றம் சாட்டப்படுகிறது.

முதல்வர் விஜய் தலையிட்டு தங்களின் “ஊழலற்ற நிர்வாகம்” என்ற வாக்குறுதியைக் காப்பாற்ற வேண்டும். இவ்வாறு விசிக எஸ்.எஸ். பாலாஜி தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

மேலும் கூட்டணி தர்மம் என்பதற்காக கூட்டணியில் இருக்கும்போது தவறுகளை பொறுத்து கொண்டோம் இப்போது அதை சொல்கிறோம் என்பது மக்களுக்கான தர்மம் ஆகுமா?

நேற்றைய கூட்டணியை பற்றி இன்றுதான் சொல்லமுடியும் என்றால்
இன்றைய கூட்டணியை பற்றி நாளைதான் சொல்ல வேண்டி வரும் என்றாகாதா?

ADVERTISEMENT

“ANYONE CAN BE ACCUSED EVERYONE ACCUSED DESERVE A FAIR TRAIL” (யார் மீது வேண்டுமானாலும் யாரும் குற்றம் சாட்டலாம்; ஆனால், குற்றம் சாட்டப்பட்ட ஒவ்வொருவரும் நேர்மையான விசாரணைக்கு உரிமையுடையவர்கள்)

நேர்மையான அரசியல் என்பது சார்ந்துள்ள கூட்டணி நலனை முன்னிறுத்துவதா? அல்லது தன்னை நம்பி சேர்ந்த மக்களின் நலனை முன்னிறுத்துவதா?

ALLIANCE INTEREST ? OR THE INTEREST OF PEOPLE ? WHICH MUST BE THE LARGER INTEREST? (கூட்டணியின் நலனா? அல்லது மக்களின் நலனா? இதில் எது மிகப்பெரிய நலனாக இருக்க வேண்டும்?) என்றும் விசிக எஸ்.எஸ். பாலாஜி பதிவிட்டுள்ளார்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share