தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான முதல்வர் விஜய்யை ( CM Vijay) சிபிஐ மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன், சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் உள்ளிட்டோர் இன்று ஜூலை 1-ந் தேதி சந்தித்தனர்.
தவெகவின் தோழமை கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று மாலை நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்க சிபிஐ, சிபிஎம் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று காலை முதல்வர் விஜய்யை சிபிஐ, சிபிஎம் தலைவர்கள் வீரபாண்டியன், சண்முகம் உள்ளிட்டோர் சந்தித்தனர்.
இந்த சந்திப்பின் போது, தவெக தோழமை கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தில் சிபிஐ, சிபிஎம் பங்கேற்க இயலாது என்ற நிலைப்பாட்டை முதல்வர் விஜய்யிடம் இருவரும் தெரிவித்தனர்.
