அமைச்சர் சரத்குமார் மீது புகார் அளித்த வழக்கறிஞருக்கு மிரட்டல்

Published On:

| By Pandeeswari Gurusamy

Growing Calls to Dismiss Minister Sarathkumar Over Drug Menace

அமைச்சர் சரத்குமார் மீது போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று புகார் அளித்த வழக்கறிஞருக்கு சமூக வலைதளங்களில் மிரட்டல் விடுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

தமிழக மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் சரத்குமார், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சென்னை சேப்பாக்கம் ஐபிஎல் போட்டியின்போது மைதானத்தில் அமர்ந்திருந்தபோது போதைப்பொருள் பயன்படுத்தியதாகக் கூறப்படும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.இதுகுறித்து அமைச்சர் சரத்குமார் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்தார். அதில், “குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாததால் மாத்திரையைப் பொடி செய்ததாக” தெரிவித்திருந்தார்.

ADVERTISEMENT

இந்நிலையில், அமைச்சரைப் பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி திமுக மாணவர் அணி சார்பில் தமிழகம் முழுவதும் இன்று போராட்டங்கள் நடைபெற்றன. இதனிடையே, அமைச்சர் சரத்குமார் மீது போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என வழக்கறிஞர் சரண்யா சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாருக்குப் பிறகு, அந்தப் பெண் வழக்கறிஞருக்கு சமூக வலைதளங்களில் பலரும் மிரட்டல் விடுப்பதாகக் கூறப்படுகிறது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக, vinothpillaivp என்ற ஐடியில் செயல்படும் ஒருவர், “நீங்கள் இதை நிரூபிக்காவிட்டால் உங்கள் மீது அவதூறு வழக்கு தொடரப்படும். உங்கள் சேம்பரில் அட்வகேட் பிராக்டீஸ் செய்ய முடியாது” எனக் கூறி, தவெக ஆதரவாளர்கள் சார்பாக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

ADVERTISEMENT

அவர் தனது பதிவில், தனது சமூக வலைதள பதிவில், “மேடம் இத நீங்க ப்ரூஸ் பண்ணலைனா உங்க மேல அவதூறு பரப்புனதுக்காக கேஸ் கொடுக்க முடியும் தெரியுமா உங்க சேம்பர்ல நீங்க இதுக்கப்புறம் அட்வகேட்டா பிராக்டிசே பண்ண முடியாது அது உங்களுக்கு தெரியுமா கடவுளை வேண்டிக்கோங்க அதை ப்ரூவ் பண்ணனும்னு அப்படி நீங்க ப்ரூஃப் பண்ணலைனா தமிழ்நாட்டுல இருக்கிற எல்லா கோர்ட்டுளையும் தவெகவை சார்ந்தவர்கள் உங்க மேல அவதூர் கேஸ் பரப்புவாங்க இதுக்கு அப்புறம் உங்களால ப்ராக்டிஸ் பண்ண முடியாது அஸ் பர் லா அதுதான் ஓகே ஒரு தவறு பண்ணாத ஒருத்தரை தவறு பண்ண தான் நீங்க அவதூறு பரப்பி அவர் மேல ஒரு கிரிமினல் நடவடிக்கை கேஸ் எடுத்தீங்கன்னா இதனால நீங்க அதை ப்ரூவ் பண்ணிட்டீங்கன்னா பிரச்சனை இல்லை என்றால் கண்டிப்பாக உங்க மேல கேஸ் போடுவோம் நீங்க ரெடியாகிக்கோங்க அந்த சீக்குவன்சிச அனுபவிக்கிறதுக்கு நீங்க நீங்க வழக்கறிஞராக இருக்கறதுனால் தொட்டதுக்கெல்லாம் போயிட்டு கேஸ் போட முடியாது மேடம் நீங்க கடந்த ஒரு வாரமா இந்த வேலையை மட்டும் தான் பாக்குறீங்க எல்லாமே அவதூறு. நாங்க எல்லாரும் சேர்ந்து உங்க மேல ஒரு கேஸ் போட்டோனா ஓகேங்களா நீங்க இதுக்கப்புறம் பிராக்டீஸ் பண்ண முடியாது பாத்துக்கோங்க நீங்க தீர விசாரிச்சு அது ஒண்ணுமே பண்ணுங்க உங்க மேல மரியாதை இருக்கு எனக்கு அதே மாதிரி இந்த மெசேஜ்க்கு கீழ கரெக்டா இதுக்கு ஆன்சர் பண்றவன் மட்டும் பதில் பண்ணுங்க இந்த கெட்ட வார்த்தை பேசுவேன் எல்லாம் பண்ணுவேன் அப்படின்னீங்கன்னா சத்தியமா நாளைக்கு காலைல உங்க எவன் எவனெல்லாம் எனக்கு போடுறீங்களோ அவங்க மேல எல்லாம் கண்டிப்பா கேஸ் ஃபைல் பண்ணுவேன் கண்டிப்பா பைல் பண்ணுவேன் நிச்சயமா பண்ணுவேன்” என்று தெரிவித்துள்ளது கவனம் ஈர்த்துள்ளது.

ADVERTISEMENT
Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர். அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த செய்திகளைத் தொடர்ந்து எழுதி வரும் இவர், தற்போது 'மின்னம்பலம்' இணைய இதழில் பணியாற்றி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share