அமைச்சர் அருண்ராஜ் பேச்சும் சபை குறிப்பில் இருந்து நீக்கம் – தவெக எம்.எல்.ஏ.வுக்கு சபாநாயகர் எச்சரிக்கை!

Published On:

| By Mathi

Minister Arunraj's speech removed from legislative records

சட்டசபையில் அமைச்சர் அருண்ராஜ் பேசிய பேச்சையும் சபைக் குறிப்பில் இருந்து நீக்குவதாக சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் தெரிவித்தார்.

அமைச்சர் அருண்ராஜ் பேசுகையில், முந்தைய ஆட்சியாளர்கள் குறித்து விமர்சித்து பேசினார். இதற்கு திமுக எம்.எல்.ஏ.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது நீர்வளத்துறை அமைச்சர் புஸ்ஸி ஆனந்தும் சில கருத்துகளைத் தெரிவித்தார். திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசும் எழுந்து நின்று அமைச்சர் அருண்ராஜ் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது கருத்துகளை சபைக் குறிப்பில் இருந்து நீக்க வலியுறுத்தினார். இதனால் சட்டசபையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

ADVERTISEMENT

இதனையடுத்து சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், அமைச்சர் அருண்ராஜின் சர்ச்சைக்குரிய விமர்சனம் சபைக் குறிப்பில் இருந்து நீக்கப்படுவதாக அறிவித்தார்.

ஆனால் அமைச்சர் அருண்ராஜ் மீண்டும் பேசும் போது சர்ச்சைக்குரிய கருத்துகளை முன்வைத்தார். இதனால் சபையில் மீண்டும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. அதிமுகவின் ஓஎஸ் மணியன் இதற்கு பதிலடி தர, அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் விளக்கம் தந்தார். இதனால் சபையில் தொடர்ந்து கூச்சல் நிலவியது.

ADVERTISEMENT

அப்போது தவெக எம்.எல்.ஏ. விஜயகுமார் எழுந்து நின்று சப்தமாக பேசினார். இதனால், சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் அவரை எச்சரித்தார்.

இதன் பின்னர், அமைச்சர் அருண்ராஜ் பேசிய சர்ச்சைக்குரிய கருத்துகள் முதல் அது தொடர்பான அனைத்து விவாதங்களும் நீக்கப்படும் என சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் அறிவித்தார்.

ADVERTISEMENT

சட்டசபையில் இன்று காலை அமைச்சர்கள் ஆதவ் அர்ஜூனா, நிர்மல்குமார், ரஞ்சித்குமாரின் ஆகியோரின் சர்ச்சை கருத்துகளை சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் நீக்குவதாகவும் அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share