மின்வெட்டு துயரம்: முதல்வர் விஜய் வீட்டுக்கு செல்லும் சாலையில் நள்ளிரவில் போராட்டம்!

Published On:

| By Mathi

Power Cut Protest Vijay Residence

முதல்வர் விஜய் (Vijay) வீட்டுக்கு செல்லும் சாலையில் நள்ளிரவில் நீலாங்கரை பகுதி மக்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மின்வெட்டு பிரச்சனை தலைதூக்கி உள்ளது. பல மணிநேரமாக நீடிக்கும் மின்வெட்டால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT

மின்வெட்டு துயரம் (Power Cut)

இந்நிலையில் சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரை பகுதி மக்கள் நேற்று இரவு திடீரென சாலை மறியல் போராட்டம் நடத்தினர். முதல்வர் விஜய் வீட்டுக்கு செல்லும் சாலையில் அமர்ந்து பொதுமக்கள் இந்தப் போராட்டத்தை நடத்தினர்.

நீலாங்கரை பகுதியில் மின்வெட்டு தொடர்ந்து நீடிப்பதால் சீரான மின்சாரம் வழங்க கோரி இந்தப் போராட்டம் நடைபெற்றது. இதனையடுத்து அதிகாரிகள் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தப் பேச்சுவார்த்தையை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

ADVERTISEMENT

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்து வரும் நிலையிலும் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை 2 வாரங்களில் 5-வது முறையாக இன்றும் (மே 26) உயர்த்தி உள்ளன. பெட்ரோல் டீசல் விலை நேற்று 4-வது முறையாக உயர்த்தப்பட்ட நிலையில் இன்றும் விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது பொதுமக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share