முதல்வராக விஜய்யைப் பார்த்ததும் எமோஷனல் ஆகிட்டேன் : குஷ்பு 

Published On:

| By Kavi

 முதலமைச்சர் விஜய்யை சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கம் சார்பில் நடிகை குஷ்பு இன்று  (மே 25) சந்தித்தார்.

அப்போது சின்னத்திரை கலைஞர்கள் சார்பான சில கோரிக்கைகளையும் முதலமைச்சரிடம் குஷ்பு முன்வைத்தார். 

ADVERTISEMENT

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,  “முதலாவதாக, என் தம்பியைப் பார்க்கும்போது எனக்கு ரொம்ப பெருமையாக இருக்கிறது.

முதலமைச்சர் ஆன பிறகு என் தம்பியைப் பார்க்கும்போது ஒரு அக்கா என்ற முறையில் எனக்கு எமோஷனலாக  இருந்தது. அவர் பார்த்ததும் கட்டிப்பிடித்து திதீ என்று சொல்லும்போது அது நிச்சயமாக ரொம்ப சந்தோஷமாக இருந்தது. 

ADVERTISEMENT

அவருடைய செயல்பாடுகளைப் பற்றிச் சொல்ல வேண்டும் என்றால், அவர் முதலமைச்சராக வந்ததற்கு பிறகு நிச்சயமாகத் தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வரப்போகிறார் என்பது நன்றாகத் தெரிகிறது. 

ரொம்ப தெளிவான ஒரு அரசாங்கத்தை இன்று பார்க்கிறோம். எல்லாரும் வேலை செய்ய வேண்டும் என்பதில் மட்டும்தான் குறியாக இருக்கிறார்கள். யாருக்கு மாமனா, மச்சானா என்று பார்க்காமல் மக்களுக்கு என்ன நல்லது செய்ய முடியும் என்பதை மட்டும்தான் பார்த்து, அதை நோக்கித்தான் அவர்கள் போய்க்கொண்டு இருக்கிறார்கள்

ADVERTISEMENT

கோவை சிறுமி வழக்கில் எதிர்க்கட்சியினர் அரசை குற்றம்சாட்டுகிறார்களே? 

அது ரொம்ப கஷ்டமான விஷயம்.  இன்று வரைக்கும் நம்ம சமுதாயத்தில் இந்த மாதிரி மிருகங்கள்  வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள்.  ஆட்சிக்கு வந்து 10 நாட்களில் எல்லாவற்றையும் சரி செய்துவிட முடியாது.  

இத்தனை ஆண்டுகளாக நீங்கள் மாறி மாறி வேலை செய்தீர்கள்.  அப்போது உங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இந்த 10 நாட்களில் ஒரு மாற்றத்தை எப்படி கொண்டு வர முடியும்?

இந்த அரசு ஐந்து ஆண்டுகள் நீடிக்காது என்று முன்னாள் முதல்வர் ஸ்டாலின் சொல்லியிருக்கிறாரே?

அதற்கு அவர்தான் பதில் சொல்ல வேண்டும் என்று கூறினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share