கருவேப்பிலையையும் காசு கொடுத்து வாங்குற காலம் வரும்: அப்டேட் குமாரு

Published On:

| By Kavi

இன்று இணையதளங்களில் வைரலான மீம்ஸ் மற்றும் ட்ரோல்களை பார்த்து ரிலாக்ஸ் ஆகலாம் வாங்க.

Unity_Bird

ADVERTISEMENT

என் தங்கை மரகதம் குமரவேலுக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் – விஜய்
நாங்க கொடுத்த வாய்ப்ப அவன் தான் டா ராஜினாமா பன்னிட்டா டா

ச ப் பா ணி

ADVERTISEMENT

“இழந்ததைத் தேடுவதைக் காட்டிலும், இழப்பு காட்டும் புதிய திசையைத் தேடுவதுதான் வாழ்க்கை.”

amudu

ADVERTISEMENT

அலுவலகத்திற்கு நம்மை விட மிகவும் தாமதமாக கிளம்பி, எந்த ட்ராபிக் ஜாம், சிக்னலிலும் சிக்காமல், நமக்கு முன்னே அலுவலகத்திற்கு வந்து ‘ ஏன் லேட் ‘ என்று நம்மை கேள்வி கேட்பவருக்கு பெயர் தான் மேனேஜர்.

AK mafia 

3 தடவ தொடர்ச்சியா ஆட்சி பண்ணுன MGR…..
2 தடவ தொடர்ச்சியா ஆட்சி பண்ணுன அம்மா கூட இத்தன தடவ DMK னு சொல்லிருக்க மாட்டாங்கடா……

அண்ணாச்சி

மக்கள் கொடுத்த ஆட்சியை யாராலும் கலைக்க முடியாது..
.. விஜய் ஆவேசம்..
-என்னமா.. அங்க சத்தம்!?..அமித்ஷா.Uncle

சாமுவேல் ராஜா

சந்தோஷமா இருக்க சம்பாதிக்கலாம்!
சம்பாதிப்பதற்காக சந்தோஷத்தை இழக்க கூடாது!!

Cockroach Caroline 

காலத்திற்கு ஏற்றவாறு
அப்டேட் செய்து கொள்ளுங்கள்..,
இல்லையேல் இவ்வுலகம் உங்களை அன்-இன்ஸ்டால் செய்துவிடும்

படிக்காதவன்

தேவை’னு வரும்போது
கருவேப்பிலையையும் காசு கொடுத்து வாங்குற காலம் வரும்.

amudu

பூமி, மூன்றில் இரு பங்கு கடல் நீராலும், ஒரு பங்கு பிளாஸ்டிக் குப்பைகளாலும் சூழப்பட்டது என்று நம் வருங்கால சந்ததிகள் படிக்கக்கூடும்.

லாக் ஆஃப்

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share