இன்று இணையதளங்களில் வைரலான மீம்ஸ் மற்றும் ட்ரோல்களை பார்த்து ரிலாக்ஸ் ஆகலாம் வாங்க.

ArulrajArun
~ பால் விலை உயர்ந்தா டீ விலை தான் உயரும் , எதுக்கு டிபன் விலை உயருது ,
~ நீ டிபன் சாப்பிட்ட கடையிலயே டீ குடிச்சா அப்படித்தாண்டா உயரும் …

ச ப் பா ணி
என் வாழ்வில்
Heart ம் அவளே
heart attack ம் அவளே

படிக்காதவன்
நாம ஒரு வார்த்தை டைப் பண்ணா
அது ஒரு வார்த்தை வர்ற மாதிரிதான்
சம் டைம்ஸ் வாழ்க்கையும்
நாம ஒண்ணு நினைச்சா
நடக்குறது ஒண்ணா இருக்கும்…

ச ப் பா ணி
கை பட்டால் குத்தம் என்பது
ஆன்லைனில் வரும் Addல் அறியாமல் கைபடுவது
Sasikumar J
பெரிய பிரச்சனைன்னு எதுவும் திடீர்னு வராது…
நேத்து சரியா கவனிக்காத சின்ன சின்ன பிரச்சனைகளோட ஒட்டு மொத்த உருவம் தான் அது…!

அண்ணாச்சி
தமிழகத்துக்கு தண்ணீர் தர இயலாது.. கர்நாடக மந்திரி..
-மாணிக்கம் தாகூர்…தலீவா
என்னனு கேளுங்க…!!??

படிக்காதவன்
ஒரு கட்டத்துக்கு மேல
Life எப்படி போகுதுங்கிறதெல்லாம்
Wife எப்படிங்கிறதை பொறுத்துதான்…

பரமசிவம் ராமசாமி
மாமா!!
அரசியலும் “ஜென் சி ” மாதிரி அப்டேட் ஆகிடுச்சு!!
எப்படி மாப்ளே!!?
“உயிருள்ள வரை மாற மாட்டேன்” அப்படினு டயலாக்கெல்லாம் பேசிட்டு..
டக்குனு “பிரேக்கப் பண்ணி” வேற கட்சிக்கு தாவிடறாங்க!!??

ArulrajArun
ரூ.2,000 நோட்டு வைத்திருந்தால் தற்போதும் மாற்றிக் கொள்ளலாம்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு
-டேய் அப்படி 2000 நோட்டு இன்னும் எவ்வளவு தாண்டா வச்சிருக்கீங்க நானெல்லாம் 2000 நோட்டை பார்த்து பல வருஷம் ஆன மாதிரி இருக்கு ..,

அண்ணாச்சி
அரசு வக்கீல் நியமனத்துக்கு
பல லட்சம் ரூபாய் பேரம்…
எடப்பாடியார..” குற்றச்சாட்டு”…!!
-இவரிடம் பிடித்ததே….
இந்த ” போர்க்குணம் ” தான்…!!

லாக் ஆஃப்
