”என் பேச்சை ‘மியூட்’ செய்துவிடுங்கள்” : நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பேச்சு!

Published On:

| By Kavi

நான் எங்கே வாயை திறந்தாலும் பிரச்சினையாகிவிடுகிறது என்று நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கூறியுள்ளார்.

திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீப தூணில் தீபம் ஏற்றலாம் என்பது முதல் இஸ்லாம் மதத்துக்கு மாறிய ஒருவர் பிற்படுத்தப்பட்ட வகுப்பு முஸ்லிம் அந்தஸ்தைக் கோர முடியாது என்பது வரை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவுகள் பேசு பொருளானது.

ADVERTISEMENT

அதேசமயம் அதிக வழக்குகளை விசாரித்தவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.  கடந்த 9 ஆண்டுகளில் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் 1,20,426 வழக்குகளை விசாரித்துள்ளார்.

இந்தசூழலில் திருப்பூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற வழக்கறிஞர்கள் பயிலரங்க நிகழ்ச்சியில் பேசிய சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், ”நான் எங்கே வாயை திறந்தாலும் அது பிரச்சினையாகிவிடுகிறது. அதனால் என் பேச்சை மட்டும் மியூட் செய்துவிடுங்கள், ரெக்கார்டு செய்ய வேண்டாம்” என்று கூறியுள்ளார்.

ADVERTISEMENT
Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share