அக்காவுக்கு ஸ்டாலின் மெசேஜ், அவருக்கு மோடி மெசேஜ்: அப்டேட் குமாரு

Published On:

| By Kavi

பக்கத்து வீட்டு அக்கா, ‘ஏங்க எனக்கு மெசேஜ் வந்துருச்சு’ அப்படினு சிரிச்சிக்கிட்டே சொன்னாங்க. அவங்க சொன்னது ஸ்டாலின் அனுப்பின ஆயிரம் ரூபா மெசேஜ். அதை கேட்டுட்டு அவங்க வீட்டுக்காரரும் நானும் வண்டில கிளம்பினோம். போகும்போது அவரு செல்லுல திடீர்னு அலாரம் அடிச்சுது. பதறிபோய் வண்டிய நிறுத்த சொன்னாரு.
என்ன தம்பி எமெர்ஜென்சினு வருதுனு சொல்லிக்கிட்டே போன கொடுத்தாரு. அத வாங்கி பாத்துட்டு, ‘அக்காவுக்கு வந்தது ஸ்டாலின் மெசேஜ், உங்களுக்கு வந்தது மோடி மெசேஜ். இது இப்படிதான் இருக்கும்’னு சொல்லிக்கிட்டே வண்டிய ஸ்டார்ட் பண்ணிட்டேன்
நீங்க அப்டேட் பாருங்க

ADVERTISEMENT

balebalu
“இரவு 8 மணிக்கு பிரதமர் டிவியில் பேச போகிறார்” என்பதை விடவா
Emergency Alert மெஸேஜ் நம்மை பயமுறுத்தி விட போகிறது

ADVERTISEMENT

Kirachand
வாழ்க்கையில் ஜெயிப்பதற்கு இரண்டு வழிகள் இருக்குங்க…
ஒன்னு : ஜெயிப்பதே இலக்கு…
இரண்டு : தோல்வியை விலக்கு…

ADVERTISEMENT

நெல்லை அண்ணாச்சி
நாவலூர் toll கட்டணம் ரத்து…!!!
” மகிழ்ச்சியில் ” மக்கள்…!!
# மோடிஜிக்கு தெரியாம பார்த்துக்கணுமே….!!!

ச ப் பா ணி
காங்கிரஸ் எங்களுக்கு துரோகம் செய்துவிட்டது! – அகிலேஷ் யாதவ் கொந்தளிப்பு!
முதல் விக்கெட்

நாகராஜா சோழன் MA MLA
தூண்டிலிடம் குத்துப்பட்ட வலியை செத்து வெந்த பின்பும் தொண்டையில் செலுத்தி பலி தீர்கிறது அகப்பட்ட மீன்கள் !

balebalu
இஸ்ரேல்-காசா போரினை தடுத்து நிறுத்த வேண்டும் : ஓபிஎஸ் கோரிக்கை –
மறந்து போய் இதுக்கும் கோர்ட்டுல ஒரு கேஸ் போட்டுட்டு போறாரு

ச ப் பா ணி
கைப்பிடித்தவனை பின் தொடர்வதை போல் தொடர்கிறேன்..
Hotspot கடன் கொடுத்தவரின் பின்னே

SKP KARUNA
ரெண்டு நாளைக்கு லீவு.
பிள்ளைகளுக்கு ஸ்கூலா மாமா?
பாதயாத்திரை மாப்ளே! பாதயாத்திரை..

சரவணன். ????
உங்களுக்குலாம் 11 மணிக்கு தான்யா டிசாஸ்டர் மேனேஜ்மென்ட் லிருந்து அலர்ட் மெசேஜ் வந்திருக்கு..
எனக்குலாம் பத்து மணிக்கே என் மனைவி கிட்ட இருந்து போனே வந்துடுச்சு.. போவியா..

கோழியின் கிறுக்கல்!!
உலகத்திலேயே அதிக சுகம் தருவது,
Rest எடுத்து Tired ஆவது தான்!!

???????????????????????? ????????????????????????????
Frnd – நெறைய Heroines எல்லாம் Slim மா அழகா இருக்கணும்னு வெறும் 3 Spoon சோறு தான் சாப்பிடுவாங்கலாம்..????
Me – நாங்க சோறு வெந்திச்சான்னு பாக்கவே 7,8 Spoon சாப்பிடுவமேடா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
லாக் ஆஃப்

டிஜிட்டல் திண்ணை: பங்காரு அடிகளார் பாலிடிக்ஸ்!

கழிவுநீர் அகற்றும் போது உயிரிழப்பு : ரூ.30 லட்சம் இழப்பீடு!

கோவை : சுற்றுலா சென்ற இடத்தில் நேர்ந்த சோகம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share