கழிவுநீர் அகற்றும் போது உயிரிழப்பு : ரூ.30 லட்சம் இழப்பீடு!

Published On:

| By Kavi

கழிவுநீர் அகற்றுப் பணிகளில் ஈடுபடும் போது உயிரிழப்பு ஏற்பட்டால் 30 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று மத்திய மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் இன்று (அக்டோபர் 20) உத்தரவிட்டுள்ளது.

மனித கழிவுகளை மனிதனே அள்ளும் அவலம் இன்றும் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் நடந்து கொண்டிருக்கிறது. சாக்கடை மற்றும் கழிவுநீர் அடைப்புகளை சுத்தம் செய்யும் போது கடந்த ஐந்து ஆண்டுகளில் 347 பேர் உயிரிழந்திருப்பதாக மத்திய அரசு தரவுகள் தெரிவிக்கின்றன.

இதனிடையே பல்ராம் சிங் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனித கழிவுகளை மனிதனே அகற்றுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கில் நீதிபதிகள் ரவீந்திர பட் மற்றும் அரவிந்த் குமார் அமர்வு இன்று உத்தரவு பிறப்பித்தது.

அப்போது கழிவுநீர் அகற்றுப்பணியின் போது தூய்மை பணியாளர்கள் இறக்க நேரிட்டால் குறைந்தது 30 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

“அதுபோன்று, கழிவுநீர் அகற்றும் பணியின் போது படுகாயம் அடைந்தாலோ அல்லது நிரந்தர உடல் பாதிப்பு ஏற்பட்டாலோ தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சம் 20 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். இதர பாதிப்புகளுக்கு 10 லட்சம் ரூபாய் வரையில் இழப்பீடு வழங்க வேண்டும்.

மேலும், கழிவுநீர் அகற்றும் பணியில் மனிதர்களை ஈடுபடுத்துவதை முற்றிலும் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தப் பணிகளில் மனிதர்களை ஈடுபடுத்துவதில்லை என்பதையும் உறுதி செய்ய  வேண்டும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

தூய்மை பணியாளர்கள் கைகளால் கழிவுகளை அகற்றுவதை தடை செய்தல் மற்றும் மறுவாழ்வு சட்டம் 2013ஐ திறம்பட செயல்படுத்த வேண்டும்.

பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் உதவித்தொகை மற்றும் பிற திட்டங்களைப் பெற உறுதி செய்ய வேண்டும்” என உத்தரவு பிறப்பித்தனர்.

பிரியா

கோவை : சுற்றுலா சென்ற இடத்தில் நேர்ந்த சோகம்!

முதல் நாள் வசூலைக் குவித்த லியோ: எவ்வளவு தெரியுமா?

சித்தர் முறைப்படி பங்காரு அடிகளார் உடல் அடக்கம்!

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.